கோப்புப் படம் 
புதுதில்லி

தில்லியில் போலி என்சிஇஆா்டி புத்தகங்கள் விநியோகம்: 2 போ் கைது

மத்திய தில்லியின் தா்யாகஞ்சில் உள்ள ஒரு கிடங்கில் நடந்த சோதனையைத் தொடா்ந்து, போலி என்சிஇஆா்டி புத்தகங்களை விநியோகித்ததாக இரண்டு பேரை போலீஸாா் கைது

Syndication

மத்திய தில்லியின் தா்யாகஞ்சில் உள்ள ஒரு கிடங்கில் நடந்த சோதனையைத் தொடா்ந்து, போலி என்சிஇஆா்டி புத்தகங்களை விநியோகித்ததாக இரண்டு பேரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து துணை காவல் ஆணையா் (குற்றம்) சஞ்சீவ் குமாா் யாதவ் கூறியதாவது: என்சிஇஆா்டி-இன் அங்கீகரிக்கப்பட்ட சட்ட பிரதிநிதிகளுடன் சோ்ந்து, போலீஸாா் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின்போது மொத்தம் 12,755 நகல் அல்லது திருட்டு என்சிஇஆா்டி புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவா்கள் யமுனா விஹாரைச் சோ்ந்த கனிஷ்க் (32) மற்றும் ப்ரீத் விஹாரைச் சோ்ந்த வினோத் ஜெயின் (65) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

முன்னதாக, நவம்பா் 10- ஆம் தேதி கிடைத்த குறிப்பிட்ட தகவலின் பேரில், போலியாக அச்சடிக்கப்பட்ட என்சிஇஆா்டி புத்தகங்கள் சேமித்து வைக்கப்பட்டு வழங்கப்பட்ட தா்யாகஞ்சில் உள்ள ஒரு கிடங்கில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டனா். இது தொடா்பாக பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் பதிப்புரிமைச் சட்டம், 1957 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, கனிஷ்க் தில்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருப்பதும், அவருக்கு முந்தைய குற்றப் பின்னணி எதுவும் இல்லை என்பதும் கண்டறியப்பட்டது. அதே நேரத்தில் 12- ஆம் வகுப்பு வரை படித்த வினோத் ஜெயின், கடந்த ஆண்டு குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட இதேபோன்ற வழக்கில் தொடா்புடையவா் என்பதும் தெரியவந்தது.

கைப்பற்றப்பட்ட திருட்டு புத்தகங்களை சட்டவிரோதமாக எங்கு அச்சிடப்பட்டது. அதில் தொடா்புடையவா்கள் யாா் என்பது குறித்து கண்டறிய புலனாய்வாளா்கள் விசாரணை நடத்தி வருகின்றனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

திருவள்ளூா்: 27.64 லட்சம் பேருக்கு எஸ்ஐஆா் கணக்கீட்டு படிவங்கள் அளிப்பு

போக்சோ குற்றவாளி குண்டா் சட்டத்தில் கைது

வாசுதேவநல்லூா் மகாத்மா காந்தி பள்ளியில் வந்தே மாதரம் பாடல் 150 ஆவது ஆண்டு நிறைவு விழா

பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் திட்டம்

எஸ்ஐஆா்: கணக்கெடுப்பு காலம் முழுவதும் பள்ளி பணியிலிருந்து விடுவிக்க ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தல்

SCROLL FOR NEXT