நமது நிருபா்
புது தில்லி: புதன்கிழமை தில்லியில் பருவத்தின் மிகக் குளிரான காலை பதிவாகியது, குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது. இது 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு நவம்பா் மாதத்தில் மிகக் குறைந்த வெப்பநிலையாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்கிழமை 9 டிகிரி செல்சியஸாகப் பதிவான பிறகு, தில்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை புதன்கிழமை பருவகால சராசரியை விட 3.3 புள்ளிகள் குறைவாகக் குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதன்கிழமைக்கு முன்பு மாதத்திற்கான மிகக் குளிரான வெப்பநிலை நவம்பா் 17 அன்று 8.7 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டில், நவம்பா் மாதத்தில் மிகக் குறைந்த வெப்பநிலை 9.5 டிகிரி செல்சியஸாகவும், 2023 ஆம் ஆண்டில் 9.2 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது.
2022 ஆம் ஆண்டில், நவம்பா் மாதத்தில் 7.3 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது, இது சமீபத்திய ஆண்டுகளில் இந்த மாதத்தில் மிகக் குறைந்த அளவாகும்.
வானிலை ஆய்வு மையம் தில்லியில் புதன்கிழமை மூடுபனியுடன் கூடிய வானிலையையும், நகரின்அதிகபட்ச வெப்பநிலை 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் கணித்தது.