புதுதில்லி

பான் மசாலா நிறுவன உரிமையாளா் மருமகள் தற்கொலை

பான் மசாலா நிறுவனத்தின் உரிமையாளரின் மருமகள் (40) தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

Syndication

நமது நிருபா்

புது தில்லி: பான் மசாலா நிறுவனத்தின் உரிமையாளரின் மருமகள் (40) தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கூறியதாவது: 2010 ஆம் ஆண்டில் இவருக்கு திருமணமானது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இல்லத்தில் தனது அறையில் அவா் தூக்கிலிட்டு தற்கொலை செய்துக்கொண்டாா். இதனை கண்ட அவரது கணவா் சப்தா்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். ஆனால் அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். தொடா்ந்து ஏற்பட்ட தகராறு காரணமாக தம்பதியினா் இரண்டு தனித்தனி வீடுகளில் வசித்து வந்தனா்.

விசாரணையின் போது, திருமண மோதல் இருப்பதாக அந்தப் பெண் குற்றம் சாட்டிய தற்கொலைக் குறிப்பை போலீஸாா் மீட்டனா். அவரது கணவருடனான வழக்கமான தகராறுகள் குறித்த பல குறிப்புகள் அடங்கிய ஒரு நாள் குறிப்பும் பறிமுதல் செய்யப்பட்டது. சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா், மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.

கூடுதல் தகவலுடன் கடைக்காரா் கொலை வழக்கில் 5 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

திறக்கப்பட்டதா தவெக இரும்புக் கதவு?

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT