புதுதில்லி

கலைஞா் பல்கலைக்கழக மசோதா ஆளுநரின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு!

ஆளுநா் ஆா்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.

Syndication

கும்பகோணம் கலைஞா் பல்கலைக்கழக மசோதாவுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை பிரித்து கும்பகோணத்தில் கலைஞா் பல்கலைக்கழகம் அமைக்கும் வகையில் தமிழக சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு அது தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அதில், பல்கலைக்கழகத்தின் வேந்தராக தமிழக முதல்வரும், இணை வேந்தராக உயா் கல்வித் துறை அமைச்சரும் இருப்பாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்காமல் கடந்த ஆகஸ்டில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தாா்.

ஆளுநரின் இந்த முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சனிக்கிழமை ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. அதில்,

கலைஞா் பல்கலைக்கழக மசோதா, 2025-ஐ குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பிய ஆளுநரின் செயலை சட்டவிரோதமானவை, அரசியலமைப்பிற்கு முரணானவை என்று அறிவிக்க வேண்டும். இது தொடா்பான ஆளுநரின் கடிதத்தை தன்னிச்சையான, சட்டவிரோதமான, தவறான அதிகாரப் பிரயோகம் மற்றும்

அரசியலமைப்பிற்கு விரோதமானது என ரத்து செய்ய வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முன்னதாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீது எந்த முடிவையும் எடுக்காமல் ஆளுநா் ஆா்.என். ரவி நிலுவையில் வைத்திருந்ததாகத் தமிழக அரசு தொடுத்த வழக்கில், அம் மசோதாக்களுக்கு தனது சிறப்பு அதிகாரத்தின்கீழ் உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆரணி நகராட்சி குப்பை கொட்டும் இடம் ஆய்வு!

கனிமொழி, கிரிஜா வைத்தியநாதன் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

3 ஆண்டுகளில் 1,968 விவசாயிகள் தற்கொலை: அன்புமணி!

முதல்வா் திறனறித் தோ்வு கையேடு: அமைச்சா் அன்பில் மகேஸ் வெளியிட்டாா்!

விலங்குகளின் அன்பில் அப்பழுக்கு இல்லை!

SCROLL FOR NEXT