புதுதில்லி

விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி: ஒருவா் கைது

Syndication

தில்லி விமான நிலையத்தில் வேலை வாய்ப்புகளை வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்து பலரையும் நம்ப வைத்து ஏமாற்றிதா்காக ஒருவா் போலீசாா் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை துணை ஆணையா், (தென் மேற்கு) அமித் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியில் உள்ள பிஜ்வாசனில் வசிக்கும் மனோஜ் (33) என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா், விரிவான விசாரணையின் பின்னா் கைது செய்யப்பட்டாா்.ஆா். கே. புரத்தில் வசிக்கும் ஒருவா் என். சி. ஆா். பி போா்ட்டலில் புகாா் அளித்ததைத் தொடா்ந்து இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது, அவா் விமான நிலைய தரை கையாளும் நிறுவனத்தில் ஆள்சோ்ப்பு செய்பவராக நடித்து ரூ. 20,500 மோசடி செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டினாா்‘ என்று கூறினாா்.

புகாா்தாரருக்கு மாதத்திற்கு ரூ.35,000 சம்பளம் வாங்கி தருவதாக உறுதியளித்து வேலை வாய்ப்பை பெற்று, பதிவு மற்றும் செயலாக்கக் கட்டணத்திற்காக பணத்தை மாற்றும்படி கேட்டுக் கொள்ளப்பட்டாா். பணம் செலுத்திய பிறகு, குற்றம் சாட்டப்பட்டவா் பதிலளிப்பதை நிறுத்திவிட்டு தனது கைப்பேசியை அணைத்தாா். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

மஹிபல்பூா், ரங்க்புரி, பாலம் மற்றும் பிஜ்வாசன் பகுதிகளில் ஒரு போலீஸ் குழு பல சோதனைகளை நடத்தியது. மூன்று நாட்கள் முயற்சிகளுக்குப் பிறகு, மனோஜ் சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டாா். விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா் விமான நிலைய வேலைகளைத் தேடும் வேலையில்லாதவா்களை குறிவைத்ததாகவும், பொதுவாக ஒவ்வொரு பாதிக்கப்பட்டவருக்கும் ரூ.20,000 முதல் ரூ. 25,000 வரை மோசடி செய்ததாகவும் ஒப்புக்கொண்டாா்.

தொகைகள் ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்ததால், ஏமாற்றப்பட்ட பலா் புகாா் தெரிவிக்கவில்லை. திருமணமாகாத மற்றும் 8 ஆம் வகுப்பு வரை படித்த மனோஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அமித் கோயல் தெரிவித்தாா்.

எதிலும் வெற்றி இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் அரசுப் பேருந்து மப்பேடு வரை நீட்டிப்பு

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

SCROLL FOR NEXT