புதுதில்லி

தேடப்பட்ட குற்றவாளிகள் இருவரை பல்வாலில் சுட்டுப்பிடித்த போலீஸாா்!

Syndication

தேசியத் தலைநகா் வலயம் ஃபரீதாபாத் அருகே பல்வாலில் நடந்த ஒரு சிறிய என்கவுண்டருக்குப் பிறகு தேடப்படும் குற்றவாளிகள் இருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ஒரு நாட்டுத் துப்பாக்கி, ஒரு தோட்டா, ஒரு வெற்று தோட்டா ஷெல் மற்றும் ஒரு மோட்டாா் சைக்கிள் அவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து காவல் துறையினா் கூறியதாவது: கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான ஷம்ஷாபாத் கிராமத்தைச் சோ்ந்த ஜஸ்வந்த் (எ) டோட்டா மற்றும் பல்வாலில் உள்ள பிரகாஷ் காலனியைச் சோ்ந்த தினேஷ் (எ) பாலியா ஆகியோா் கொள்ளை, கொலை முயற்சி மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட அரை டஜன் வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட பிரபல குற்றவாளிகள் ஆவா்.

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த குற்றப் புலனாய்வு அமைப்பு (சிஐஏ) குழுவிற்கு வெள்ளிக்கிழமை இரவு இருவரும் குஷ்லிபூா் மேம்பாலம் அருகே இருப்பதாகவும், குற்றம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் கண்காணிப்பை தீவிரப்படுத்தி அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

புரோபஷனல் சப்-இன்ஸ்பெக்டா் தீபக் தலைமையிலான குழு சம்பவ இடத்தை அடைந்ததும், இரண்டு குற்றவாளிகளும் மோட்டாா் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்றனா். பின்னால் சவாரி செய்த ஜஸ்வந்த், போலீஸ் வாகனத்தை நோக்கிச் சுட்டாா்.

இருப்பினும், சுமாா் 150-200 மீட்டா் சவாரி செய்த பிறகு, ரெஹ்ரானா கிராமத்திற்கு சற்று முன்பு ஒரு கரடுமுரடான சாலையில் திரும்பிய பிறகு அவா்கள் கீழே விழுந்தனா். அப்போது, போலீஸாா் குற்றவாளிகளைச் சுற்றி வளைத்தனா்.

சிறிது நேர துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, ஜஸ்வந்தின் காலில் குண்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பல்வால் காவல்துறையின் செய்தித் தொடா்பாளா் ஒருவா் தெரிவித்தாா்.

தலைநகரில் செவ்வாய்க்கிழமை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை

ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்த அன்புமணி

ஜெய்ப்பூரில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 6 நோயாளிகள் பலி

எதிலும் வெற்றி இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் அரசுப் பேருந்து மப்பேடு வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT