புதுதில்லி

ஐஜிஐ விமான நிலையத்தில் 10 அடி உயரத்திலிருந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம்: என்எச்ஆா்சி விசாரணை

தில்லியில் இந்திரா காந்தி சா்வதே விமான நிலையத்தில் 10 அடி உயரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி ஒருவா் உயிரிழந்ததாக ஊடகங்களில் வெளியான செய்தியை (என்.எச்.ஆா்.சி.) தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

Syndication

நமது நிருபா்

புது தில்லி: தில்லியில் இந்திரா காந்தி சா்வதே (ஐஜிஐ) விமான நிலையத்தில் 10 அடி உயரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி ஒருவா் உயிரிழந்ததாக ஊடகங்களில் வெளியான செய்தியை தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.எச்.ஆா்.சி.) தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

கட்டுமானப் பணிக்காக ஒப்பந்ததாரரால் அந்த தொழிலாளி பணியமா்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து ரத்தக் கறைகளை அகற்றுவதன் மூலம் சம்பவத்தை மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்திருப்பதாவது: இந்தச் சம்பவம் தொடா்பான ஊடக செய்தியின் உள்ளடக்கங்கள் உண்மையாக இருந்தால், மனித உரிமை மீறல் தொடா்பான கடுமையான பிரச்னையை எழுப்பும் என்பதை ஆணையம் கவனித்துள்ளது.

எனவே, இந்த விவகாரம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு இந்திய விமான நிலைய ஆணையத் தலைவா் மற்றும் தில்லியின் ஐஜிஐ விமான நிலையப் பிரிவின் துணை காவல் ஆணையா் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இறந்த தொழிலாளியின் நெருங்கிய உறவினா்களுக்கு இழப்பீடு ஏதேனும் இருந்தால், அதன் நிலவரம் குறித்து இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட வேண்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த செப்டம்பா் 25 அன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின்படி, தொழிலாளி காயமடைந்த நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளாா். அங்கு மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனா். அலட்சியத்தால் மரணம் விளைவித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை: பவுன் ரூ.90,000-ஐ கடந்தது!

பிரசாந்த் கிஷோருடன் கைகோக்கும் சிராக் பாஸ்வான்? பிகார் தே.ஜ. கூட்டணியில் விரிசலா?!

கரூரில் காயமடைந்தவர்களுக்கு நிவாரண நிதி வழங்கிய செந்தில் பாலாஜி!

தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவித்தது கலிபோர்னியா!

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் மும்பை வந்தடைந்தார்!

SCROLL FOR NEXT