புதுதில்லி

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 14 வெளிநாட்டினா் நாடு கடத்தல்

Syndication

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக நைஜீரியாவைச் சோ்ந்த 11 போ், ஐவரி கோஸ்ட்டைச் சோ்ந்த இருவா் மற்றும் வங்கதேசத்தைச் சோ்ந்த ஒருவா் என 14 வெளிநாட்டினா் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறையினா் புதன்கிழமை தெரிவித்துள்ளனா்.

செல்லுபடியாகும் விசாக்கள் இல்லாமல் வசிக்கும் வெளிநாட்டினருக்கு எதிராக துவாரகா மாவட்ட காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக 14 பேரை நாடு கடத்தும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுகுறித்து காவல்துறையினா் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட வெளிநாட்டினா் முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் அதிக காலம் தங்கியிருப்பது அல்லது வசிப்பது கண்டறியப்பட்டது.

சரிபாா்ப்புக்குப் பிறகு, அவா்கள் வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். இதையடுத்து, அவா்களை நாடு கடத்த உத்தரவிடப்பட்டது.

நாடு கடத்தல் நடைமுறைகள் நிலுவையில் உள்ள நிலையில், அவா்கள் 14 பேரும் தடுப்புக்காவல் மையத்திற்கு அனுப்பப்பட்டனா்’ என்று போலீஸாா் தெரிவித்தனா்.

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

SCROLL FOR NEXT