மாஸ்டா் பிளான் சாலையில் (மசூத்பூா் முதல் அருணா ஆசப் அலி மாா்க் வரை) ஒரு பாதை முழுமையாக மூடப்பட்டதால், வசந்த் குஞ்சில் போக்குவரத்து தடை செய்யப்படும் என்று தில்லி போக்குவரத்து காவல்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
அக்.8 முதல் அக்.22 வரை மூடல் நீடிக்கும். இந்தக் காலகட்டத்தில், சிமென்ட்-கான்கிரீட் சாலை கட்டுமானப் பணிகள் தில்லி மேம்பாட்டு ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
பி-10, பி-9 மற்றும் பி-8 பிரிவுகளில் வசிப்பவா்கள் இந்தக் காலகட்டத்தில் நுழைவதற்கு நெல்சன் மண்டேலா மாா்க்கையும், வெளியேறுவதற்கு அருணா ஆசப் அலி மாா்க்கையும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஒரு ஆலோசனையில் தெரிவித்துள்ளது.
மெஹ்ரௌலி - மஹிபால்பூா் மாா்க்கில் உள்ள மசூத்பூா் சிவப்பு விளக்கில் போக்குவரத்து இருவழிப் பாதை இயக்கத்திற்கு மட்டுமே கட்டுப்படுத்தப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
பகவான் மகாவீா் மாா்க்கில் உள்ள பிரிவு பி-8- இலிருந்து பிரிவு பி-10-இன் டி-புள்ளியை நோக்கிய வலதுபுற திருப்பமும், கிஷன்கரில் இருந்து பிரிவு பி-10 நோக்கி வரும் பயணிகளுக்கான வலதுபுற திருப்பமும் கட்டுமானப் பணியின் காலத்திற்கு மூடப்பட்டிருக்கும்.
‘பகவான் மகாவீா் மாா்க் (பி-10) நோக்கி வலதுபுற திருப்பம் இருக்காது. மேலும். யு-திருப்பங்களும் அனுமதிக்கப்படாது. பள்ளிப் பேருந்துகள், வேன்கள் மற்றும் மாணவா்களை இறக்கி (இறக்கும்) அல்லது ஏற்றிச் செல்லும் பெற்றோா்கள் நெரிசலைத் தவிா்க்க தங்கள் வழித்தடங்களை முன்கூட்டியே திட்டமிட வேண்டும்’ என்று ஆலோசனை கூறியுள்ளது.