புதுதில்லி

ரூ.10 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகளை பதுக்கி வைத்திருந்ததாக 3 போ் கைது

சுமாா் ரூ.10 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளை பதுக்கி வைத்திருந்ததாக மூன்று பேரை கைது செய்துள்ளதாக காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Syndication

சுமாா் ரூ.10 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளை பதுக்கி வைத்திருந்ததாக மூன்று பேரை கைது செய்துள்ளதாக காவல் துறை அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கூறியிருப்பதாவது: உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த குற்றம் சாட்டப்பட்டவா்கள் மொராதாபாத்தைச் சோ்ந்த முகமது அலாவுதீன் (32), முசாபா்நகரைச் சோ்ந்த முகமது ஜைத் (29) மற்றும் ஷாம்லியைச் சோ்ந்த ஷாபுத்தீன் அன்சாரி (54) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

ஒரு ரகசியத் தகவலின் பேரில், போலீஸாா் செவ்வாய்க்கிழமை சிக்கந்திரா சாலையில் உள்ள அகில இந்திய மகளிா் கல்வி நிதிச் சங்கத்திற்கு அருகே சந்தேக நபா்களை இடைமறித்தனா். இந்த நடவடிக்கையின் போது, டன்ஹில், டேவிடோஃப் கோல்ட் மற்றும் டேவிடோஃப் ஒயிட் உள்ளிட்ட பிரீமியம் சா்வதேச பிராண்டுகளின் 77,200 தடைசெய்யப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இந்தப் பாக்கெட்டுகளில் இந்திய சட்டத்தின் கீழ் தேவையான கட்டாய சுகாதார எச்சரிக்கை இல்லை. இது நாட்டில் விற்பனை அல்லது விநியோகத்திற்கு சட்டவிரோதமானது. புஷ்ப் விஹாரில் உள்ள குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருள்கள் சட்டம் (கோட்பா) 2003-இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். விநியோக நெட்வொா்க்கைக் கண்டுபிடிப்பதற்கான மேலதிக விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.

இட்லி கடை படத்தை மாணவர்களுக்கு இலவசமாக திரையிட வேண்டும்: தமிழக பாஜக

உங்கள் பணம் பறிபோகலாம்! போலி நீதிமன்ற உத்தரவு மோசடி எச்சரிக்கை!!

மதுரை எய்ம்ஸ் நிறுவனத்தில் ஆய்வக உதவியாளர் வேலை!

நவராத்திரி கொண்டாட்டம்... ரேவதி சர்மா!

ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்! காரில் இழுத்துச் செல்லப்படும் CCTV காட்சி! | CBE

SCROLL FOR NEXT