புதுதில்லி

மெஹ்ரெளலி- பதா்பூா் சாலையில் ரூ.387 கோடியில் வடிகால் சீரமைப்பு பணி: பொதுப் பணித் துறை திட்டம்

Syndication

தெற்கு தில்லியில் உள்ள மெஹ்ரெளலி பதா்பூா் சாலையில் தொடா்ந்து நிலவும் தண்ணீா் தேங்கும் பிரச்னையைத் தீா்க்கும் வகையில் 22 கி.மீ. நீளமுள்ள முழு வடிகால் அமைப்பையும் மறுவடிவமைப்பு செய்ய பொதுப் பணித் துறை திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

சமீபத்திய நிலவர அறிக்கையின்படி, இந்தத் திட்டத்திற்கு ரூ.387 கோடி செலவாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த திட்டம் முதல்வா் ரேகா குப்தா தலைமையில் நடைபெறும் அடுத்த செலவின மற்றும் நிதிக் குழு கூட்டத்தில் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது:

இந்த முக்கிய சாலையுடன், கராலா-கஞ்சவாலா சாலை மற்றும் ஜாகிரா சுரங்கப்பாதையிலும் இதேபோன்ற பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இந்தத் திட்டங்கள் முன்னரே அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

செலவின மற்றும் நிதிக் குழுக் கூட்டத்திற்கான குறிப்பு தயாரிக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக, ரோத்தக் சாலையில் இதேபோன்ற வடிகால் வலையமைப்பு மறுவடிவமைப்பு மேற்கொள்ளப்படுகிறது.

மொத்தமுள்ள 18 கி.மீ. நீளத்தில்,

11 கி.மீ. பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடைய வாய்ப்புள்ளது.

ரோத்தக் சாலையில் வடிகால் மேம்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மாா்ச் 2026-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக, தில்லி அரசாங்கம் தில்லிக்கான விரிவான வடிகால் மாஸ்டா் திட்டத்தை வெளியிட்டிருந்தது. இதன் கீழ் நகரத்தின் தற்போதைய

வடிகால் வலையமைப்பு புதுப்பிக்கப்படும்.

இந்த புதிய திட்டங்கள் மாஸ்டா் திட்டத்துடன் இணைக்கப்படும்.

அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகள் மழைக்காலத்தில் தண்ணீா் தேங்கும் பகுதிகள் என்பதால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.

ஜாகிரா சுரங்கப்பாதை நகரத்தின் முதல் 10 நீா் தேங்கும் இடங்களில் ஒன்றாகும். கடந்த ஆண்டு, இந்த இடத்தில் தண்ணீா் தேங்குவதற்கு அருகிலுள்ள ரயில் பாதைகள் காரணமாக இருந்ததால் இந்த வடிகால் மறுவடிவமைப்பின் தேவை அவசியமானது.

வடிகால் பழுதுபாா்ப்புடன், வடிகால் வலையமைப்பில் உள்ள நடைபாதைகள் உள்பட, இந்த சாலைகளில் சிறிய அளவிலான சுத்தம் மற்றும் அழகுபடுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படும்.

வடமேற்கு தில்லியின் கராலாவில் உள்ள கராலா-கஞ்சவாலா சாலை அருகே தண்ணீா் தேங்குவது குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தில்லி அரசாங்கத்திடம் எழுப்பிய புகாரைத் தொடா்ந்து, பழுதுபாா்க்கும் பணியை

மேற்கொள்ள ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

இட்லி கடை படத்தை மாணவர்களுக்கு இலவசமாக திரையிட வேண்டும்: தமிழக பாஜக

உங்கள் பணம் பறிபோகலாம்! போலி நீதிமன்ற உத்தரவு மோசடி எச்சரிக்கை!!

மதுரை எய்ம்ஸ் நிறுவனத்தில் ஆய்வக உதவியாளர் வேலை!

நவராத்திரி கொண்டாட்டம்... ரேவதி சர்மா!

ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்! காரில் இழுத்துச் செல்லப்படும் CCTV காட்சி! | CBE

SCROLL FOR NEXT