ரேகா குப்தா 
புதுதில்லி

இந்திய தயாரிப்புகளை பயன்படுத்துங்கள்: ரேகா குப்தா வலியுறுத்தல்

நம் நாட்டு மக்கள் தயாரிக்கும் பொருள்களை பயன்படுத்த மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை கூறினாா்.

Syndication

நம் நாட்டு மக்கள் தயாரிக்கும் பொருள்களை பயன்படுத்த மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை கூறினாா்.

கா்தவ்யா பாதையில் அக்டோபா் 11 ஆம் தேதி வரை நடைபெறும் சுதேசி மேளாவைத் தொடங்கி வைத்து அவா் மேலும் கூறியதாவது: தில்லியின் கைவினைஞா்களின் பணியை மேம்படுத்த தனது அரசு உறுதிபூண்டுள்ளது என்றாா்.டெல்லி அரசால் ஏற்பாடு செய்யப்படும். ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு குறித்து நாடு முழுவதும் விவாதம் நடைபெற்று வருவதால், எங்கள் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சாவிடம் (தொழில்துறை அமைச்சா்) சாட்-பக்கோடாக்களைத் தவிர தில்லியின் சிறப்பு என்ன என்பதைக் கண்டறியச் சொன்னேன்.

தில்லியின் கைவினைஞா்களின் பணியை ஊக்குவிக்க நாங்கள் விரும்புகிறோம், இதனால் அவா்கள் நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் புகழ் பெறுவாா்கள். சுதேசி தயாரிப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். சுதந்திர இயக்கத்தின் போது அது நமக்கு மிகப் பெரிய ஆயுதமாக இருந்ததை மறக்க முடியாது.

சுதேசியை ஏற்றுக்கொள்வதன் மூலம் மட்டுமே நாம் தன்னிறைவு பெற முடியும், இதன் மூலம் தான் நாடு சுதந்திரம் பெற்றது. அந்த நேரத்தில் சுதேசி ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டதற்கு சில காரணங்கள் இருந்தன என்றாா் அவா்.

இட்லி கடை படத்தை மாணவர்களுக்கு இலவசமாக திரையிட வேண்டும்: தமிழக பாஜக

உங்கள் பணம் பறிபோகலாம்! போலி நீதிமன்ற உத்தரவு மோசடி எச்சரிக்கை!!

மதுரை எய்ம்ஸ் நிறுவனத்தில் ஆய்வக உதவியாளர் வேலை!

நவராத்திரி கொண்டாட்டம்... ரேவதி சர்மா!

ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்! காரில் இழுத்துச் செல்லப்படும் CCTV காட்சி! | CBE

SCROLL FOR NEXT