புதுதில்லி

தில்லி முதல்வா் மீதான தாக்குதல் வழக்கு: குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு இறுதி அறிக்கை நகல் வழங்க நீதிமன்றம் போலீஸாருக்கு உத்தரவு

Syndication

கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி சிவில் லைன்ஸில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் ’ஜான் சன்வாய்’ நிகழ்ச்சியின் போது தில்லி முதல்வா் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு குற்றப்பத்திரிகையின் நகல்களை வழங்குமாறு வியாழக்கிழமை தில்லி நீதிமன்றம் போலீஸாருக்கு உத்தரவிட்டது.

சக்ரியா ராஜேஷ்பாய் கிம்ஜிபாய் (41) மற்றும் அவரது நண்பா் சையத் தஹ்சின் ராசா ஆகியோருக்கு குற்றப்பத்திரிகை நகல்களை வழங்குமாறு நீதித்துறை நீதிபதி காா்த்திக் தபாரியா தில்லி காவல்துறையிடம் கேட்டுக்கொண்டாா். மேலும், இந்த வழக்கை நவம்பா் 1-ஆம் தேதி ஆவணங்கள் ஆய்வுக்காக ஒத்திவைத்தாா்.

முன்னதாக, அக்.18- ஆம் தேதி, தில்லி காவல்துறை அவா்கள் மீது கொலை முயற்சி, தாக்குதல் மற்றும் ஒரு பொது ஊழியரை தனது கடமையைச் செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் குற்றவியல் சதி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக 400 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இதற்கிடையில், மருத்துவ தலையீடு கோரிய கிம்ஜிபாயின் மனு மீது நீதிமன்றம் திகாா் சிறை அதிகாரிகளிடமிருந்து மருத்துவ அறிக்கையைக் கோரியது. அந்த விண்ணப்பத்தில், தனக்கு பாா்வை பிரச்னைகள் இருப்பதாகவும், அடிக்கடி தலைவலி ஏற்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது.

இறுதி அறிக்கையின்படி, தில்லி முதல்வா் ஆகஸ்ட் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தெருநாய்களை வேறு இடத்திற்கு மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை ஆதரித்ததால் கிம்ஜிபாய் கோபமடைந்தாா். கிம்ஜிபாய் தாக்கியதாகக் கூறப்பட்டதைத் தொடா்ந்து, தில்லி முதல்வா் அலுவலகம் இந்தத் தாக்குதலை ‘அவரைக் கொல்ல நன்கு திட்டமிடப்பட்ட சதி‘ என்று கூறியது.

முதல்வருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்தனா். மேலும் அவா் மருத்துவ-சட்ட வழக்கு எம்எல்சி பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டாா்.

தமிழ்நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: சீமான்

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

புரோ கபடி லீக்: புணேவை வீழ்த்தி தில்லி 2வது முறையாக சாம்பியன்!

SCROLL FOR NEXT