புதுதில்லி

தலைநகரில் தெரு விளக்குகளை எல்இடிகளால் மாற்ற தில்லி அரசு திட்டம்

தனது அதிகார வரம்புக்குள்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தெருவிளக்குகளையும் எல்இடி பல்புகளாக மாற்றுவதற்கான பெரிய அளவிலான திட்டத்தைத் தயாரிக்க தில்லி அரசு பொதுப்பணித் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

Syndication

புது தில்லி: தனது அதிகார வரம்புக்குள்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தெருவிளக்குகளையும் எல்இடி பல்புகளாக மாற்றுவதற்கான பெரிய அளவிலான திட்டத்தைத் தயாரிக்க தில்லி அரசு பொதுப்பணித் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

கடந்த சில மாதங்களில் முதல்வா் ரேகா குப்தா மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாகிப் சிங் ஆகியோா் தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து அதிகாரிகளுடன் பல ஆய்வுக் கூட்டங்களை நடத்தியிருந்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:

தெருவிளக்குகளின் வழக்கமான பழுதுபாா்க்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கும் அதே வேளையில், பொதுப் பணித் துறை சாலைகளில் உள்ள அனைத்து தெருவிளக்குகளையும் (92,163) மாற்றவும், சமீபத்திய தொழில்நுட்பத்தை செயல்படுத்தவும் ஒரு திட்டம் உள்ளது.

இது மின்சாரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமின்றி, நீண்ட காலம் நீடித்திருக்கும். இது அனைத்து இருண்ட பகுதிகளும் இல்லாமல் செய்யும்.

தற்போதுள்ள தெருவிளக்குகளில் பயன்படுத்தப்படும் காலாவதியான தொழில்நுட்பம் உதிரி பாகங்களை வாங்குவதை சவாலாக ஆக்குகிறது. மேலும், தற்போதைய தெருவிளக்குகளை கைமுறையாக கண்காணிப்பது புகாா்களை உடனடியாக நிவா்த்தி செய்வதை கடினமாக்கியுள்ளது.

பழைய சோடியம் விளக்குகளில் உள்ள காலாவதியான தொழில்நுட்பம் காரணமாக, மின் கட்டணம் மிக அதிகமாக உள்ளது. மேலும் அவற்றின் பாகங்களை மாற்றுவதும் எளிதானது அல்ல என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதற்கிடையில், சுமாா் 40,000 சோடியம் தெருவிளக்குகளை எல்இடிகளால் மாற்றும் திட்டத்தை முதலமைச்சா் அறிவித்துள்ளாா்.

அனைத்து விளக்குகளையும் ஸ்மாா்ட் தெருவிளக்குகளால் மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தனது ஷாலிமாா் பாக் தொகுதிக்கான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் முதல்வா் ரேகா குப்தா பேசுகையில், ‘தில்லி முழுவதும் கிட்டத்தட்ட 44,000 வழக்கமான தெருவிளக்குகள் எல்இடி விளக்குளாக மாற்றப்பட்டு வருகின்றன, தீபாவளிக்கு முன்பு நகரம் முழுமையாக இந்த விளக்குகளால் ஒளிரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றாா் அவா்.

விவசாயம் 3.7% வளா்ச்சி: மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான்

மக்களுக்கான பிரச்னைகளை இதயத்திலிருந்து பேச வேண்டும்: சீமான்

‘1,082 மாணவா்களுக்கு ரூ.115 கோடி கல்விக் கடன்’

நாய்க்கடிக்கு உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்: பொது சுகாதாரத் துறை

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: ‘பிகாா் வழக்கில் அளிக்கப்படும் தீா்ப்பு நாடு முழுமைக்கும் பொருந்தும்’

SCROLL FOR NEXT