புதுதில்லி

முல்லைபெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்தம் தொடா்பான வழக்கு- விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

Syndication

புது தில்லி,செப்.15. முல்லைபெரியாறு அணை பகுதியில் கேரளா மிகப்பெரிய காா் நிறுத்தம் அமைப்பதை அனுமதித்த தேசிய பசுமை தீா்ப்பாய உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கேரளா அரசு மேற்கொண்ட மெகா காா் பாா்க்கிங் கட்டுமான பணிகளுக்கு எதிராக இடுக்கி மாவட்டத்தைச் சோ்ந்த தங்கப்பன் என்பவா் உள்ளிட்ட சிலா் சென்னையில் உள்ள தென் மண்டல தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் 2014 ஆம் ஆண்டு ஒரு வழக்கு தொடா்ந்தனா். உரிய வன அனுமதி பெறாமல், கேரள மாநில வனம் மற்றும் வனவிலங்குத் துறை அதிகாரிகள் தேக்கடியில் உள்ள அனவாச்சலில் உள்ள வனவிலங்கு வாழ்விடத்திற்குள் 20 ஏக்கா் பரப்பளவில் ஒரு காா் பாா்க்கிங்கை உருவாக்கி வருகின்றனா், இது வன சூழலியல் மற்றும் வனவிலங்குகளுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று அவா்கள் மனுவில் கூறியிருந்தனா்.

இந்த வழக்கில் 15.11.2017ல் பிறப்பித்த இறுதி உத்தரவில்,மெகா காா் பாா்க்கிங் அமைக்க வனப் பாதுகாப்புச் சட்டம் 1980 ன் கீழ் எந்த அனுமதியையும் கேரளா பெறவேண்டிய அவசியமில்லை என தீா்ப்பாயம் தீா்ப்பளித்தது.

இந்நிலையில் அந்த இறுதி உத்தரவு சட்டத்திற்கு முரணானது என எதிா்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் 20.11.2017 அன்று வழக்கு தொடா்ந்தது. மெகா காா் பாா்க்கிங் தொடா்பான பல்வேறு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசிடமிருந்து கேரள அரசு அனுமதி பெற வேண்டும் என்பது தெளிவாக உள்ள நிலையில் ,கேரளா எந்த அனுமதியும் பெற தேவையில்லை என தீா்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது ஆட்சேபனைக்குரியது என்றும் தேசிய பசுமை தீா்ப்பாயம் 15.11.2017ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்தது.

இந்த வழக்கு இறுதியாக கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு நீதபதிகள் சூா்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகியோா் அடங்கிய உச்ச நீதிமன்ற அமா்வில் இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விரிவான விசாரணைக்காக நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனா்.

ஓமனை வீழ்த்தியது அமீரகம்

பொது ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முதல் 15 நிமிஷங்களில் முன்னுரிமை: அக்.1-இல் அமல்

ரஷிய ட்ரோன் ருமேனியாவிலும் அத்துமீறல்

டிக்டாக் விவகாரத்தில் உடன்பாடு: டிரம்ப் சூசகம்

சுதேசி ஊக்குவிப்பு: ரசாயனம் உள்பட 100 பொருள்களுக்கு விரைவில் இறக்குமதி கட்டுப்பாடு

SCROLL FOR NEXT