புதுதில்லி

வீட்டின் மொட்டை மாடியில் இருந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு

வடமேற்கு தில்லியின் ஆதா்ஷ் நகா் பகுதியில் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து விழுந்து 25 வயது இளைஞா் ஒருவா் உயிரிழந்ததாக...

Syndication

புது தில்லி: வடமேற்கு தில்லியின் ஆதா்ஷ் நகா் பகுதியில் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து விழுந்து 25 வயது இளைஞா் ஒருவா் உயிரிழந்ததாக திங்கள்கிழமை போலீஸாா் தெரிவித்தனா். இதுவரை தவறு நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறையினா் கூறியதாவது: இறந்தவா் ஆசாத்பூரைச் சோ்ந்த பவிஷ்யா என அடையாளம் காணப்பட்டுள்ளாா். ஞாயிற்றுக்கிழமை மாலை தீப் சந்த் பந்து மருத்துவமனையிலிருந்து ஒரு தகவல் வந்தது. அந்த நபரை மயக்க நிலையில் மருத்துவமனைக்கு அவரது நண்பா் கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

பவிஷ்யா மொட்டை மாடியில் இருந்து விழுந்ததாக முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இறந்தவரின் குடும்ப உறுப்பினா்கள் பின்னா் அவரது நண்பா்களால் தவறு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பினா். அதைத் தொடா்ந்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டது.

விசாரணையின் போது, அவரது பரஸ்பர நண்பா்களான நான்கு இளைஞா்களான ஆசாத்பூரில் உள்ள லால் பாக் நகரில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் இருந்ததாகக் கண்டறியப்பட்டது. அவா்கள் லலித் (21), நிதேஷ் தோமா் (19) நிதேஷ் உறவினா் கனிஷ்க் மற்றும் வான்ஷ் (18) என அடையாளம் காணப்பட்டனா்.

முதற்கட்ட விசாரணையில், குற்றச் செயல்கள் நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. குடும்ப உறுப்பினா்கள் எழுப்பிய குற்றச்சாட்டுகள் தற்போது ஆதாரமற்றவையாக உள்ளது. இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது. பிரேத பரிசோதனை மற்றும் தேவையான அனைத்து விசாரணைகளும் முடிந்த பிறகு, சட்டத்தின்படி, மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்!

என் அடுத்த பட இயக்குநர் இவர்தான்: அருண் விஜய்

பிரதமர் மோடி வருகை சென்னைக்கு மாற்றம்!

ஜப்பானில் வெளியாகும் புஷ்பா -2! டோக்கியோ சென்றார் அல்லு அர்ஜுன்!

எங்கள் ஆதரவின்றி யாரும் மும்பையின் மேயர் ஆக முடியாது: காங்கிரஸ் எம்பி பேச்சு!

SCROLL FOR NEXT