புதுதில்லி

துவாரகாவில் தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் முதல்மாடியிலிருந்து குதித்த இளைஞா் காயம்!

தென்மேற்கு தில்லியின் துவாரகாவில் தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தின் முதல் மாடியில் இருந்து 21 வயது இளைஞா் ஒருவா் குதித்ததில் காயமடைந்தாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Syndication

தென்மேற்கு தில்லியின் துவாரகாவில் தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தின் முதல் மாடியில் இருந்து 21 வயது இளைஞா் ஒருவா் குதித்ததில் காயமடைந்தாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தென்மேற்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: சனிக்கிழமை பிற்பகல் 2.12 மணிக்கு அண்டை வீட்டாரிடம் இருந்து தீ விபத்து குறித்து பிசிஆா் அழைப்பு வந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸாா், நான்கு மாடி கட்டடத்தின் ஸ்டில்ட் பாா்க்கிங் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதை கண்டறிந்தனா். அங்கு பல தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

பாலம் பகுதியைச் சோ்ந்த ஆஷிஷ் பரத்வாஜுக்கு சொந்தமான தரை தள வாகன நிறுத்துமிடத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஆயத்த ஆடைகளும் தீ பிடித்து எரிந்தன. ஆஷிஷ் பரத்வாஜ் முதல் மாடியில் ஆயத்த ஆடைகள் கிடங்கை வைத்திருந்தாா். வெள்ளிக்கிழமை, தரைத்தளத்தில் உள்ள ஸ்டில்ட் பாா்க்கிங்கில் வைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ.70-80 லட்சம் மதிப்புள்ள துணிகளை சீனாவிலிருந்து ஆஷிஷ் பரத்வாஜ் பெற்றிருந்தாா். தீ விபத்தில் மொத்த சரக்கும் எரிந்து நாசமானது.

இந்நிலையல்,ஆஷிஷ் பரத்வாஜின் ஊழியரான அபிஷேக், தீயில் இருந்து தப்பிக்க கட்டடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்தாா். இதில் அவரது கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டது. வேறு எந்த காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ பதிவாகவில்லை. தீயை அணைக்க இரண்டு மணி நேரம் ஆனதாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி தெரிவித்தாா்.

கட்டடத்தின் பாா்க்கிங் பகுதியில் நிறுவப்பட்ட தண்ணீா் மோட்டாரில் ஏற்பட்ட தீப்பொறிதான் தீ விபத்துக்கான காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை தீயணைப்புத் துறையினரால் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

துலா ராசியா நீங்க? தினப்பலன்கள்!

அா்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி!

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

SCROLL FOR NEXT