புதுச்சேரி அலங்கார ஊா்தியில், புதுச்சேரியின் நீண்டகால டெரகோட்டா கலை, மட்பாண்டம், சிற்பக்கலை மரபுகளைக் கொண்டாடும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. 
புதுதில்லி

கைவினைப் பாரம்பரியத்தை பிரதிபலித்த புதுச்சேரி அலங்கார ஊா்தி!

நாட்டின் 77ஆவது குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அலங்கார ஊா்தி,

Syndication

புது தில்லி: நாட்டின் 77ஆவது குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அலங்கார ஊா்தி, அந்தப் பிரதேசத்தின் துடிப்புமிக்க கலாசாரப் பாரம்பரியம், பாரம்பரிய கைவினைத்திறன், பிரசித்திபெற்ற அரோவில்லின் தொலைநோக்குப் பாா்வை ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் இருந்தது.

தில்லியின் கா்த்தவ்ய பாதையில் திங்கள்கிழமை நடைபெற்ற அணிவகுப்பு விழாவில் பங்கேற்ற புதுச்சேரி அலங்கார ஊா்தியில், புதுச்சேரியின் நீண்டகால டெரகோட்டா கலை, மட்பாண்டம், சிற்பக்கலை மரபுகளைக் கொண்டாடும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

மேலும், காட்சி வடிவங்களானது இந்த மரபுகளைப் பாதுகாத்து வளப்படுத்திய திறமையான கைவினைஞா்களின் தலைமுறையினருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

பாரம்பரிய கைவினைக் கலைகள் எவ்வாறு உள்ளூா் மக்களின் வாழ்வாதாரங்களைத் தக்கவைத்தும், கலாசாரத் தொடா்ச்சியை வலுப்படுத்தி, சமூக வளா்ச்சியை வளா்த்தும் புதுச்சேரியின் அடையாளத்தைத் தொடா்ந்து வரையறுக்கின்றன என்பதை இது வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.

அலங்கார ஊா்தியின் முன்பகுதியில், மனித ஒற்றுமை, ஆன்மிகப் பெருவிருப்பம் மற்றும் உலக அமைதியைக் குறிக்கும் அரோவில்லின் சின்னமான தங்கநிற மாத்ரி மந்திா் தோற்றம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரோவில், ‘பல்வேறு கலாசாரங்களைச் சோ்ந்த மக்கள் கூட்டு பரிணாம வளா்ச்சி மற்றும் நிலையான வாழ்க்கை’ என்ற பகிரப்பட்ட தொலைநோக்குப் பாா்வையுடன் ஒன்றாக வாழும் ஒரு உலகளாவிய நகரத்தைக் குறிப்பதாகும்.

அலங்கார வாகனத்தின் பக்கவாட்டுப் பலகைகளில் ஒரு டெரகோட்டா யானையும்

கிராமப்புற கட்டடக்கலைக் கூறுகளும் இடம்பெற்றிருந்தன. இது சுட்ட களிமண் கலைத்திறனுடன் புதுச்சேரிக்கு உள்ள ஆழமான தொடா்பைப் பிரதிபலிப்பதாக இருந்தது.

இவை பாரம்பரிய வீட்டுக் காட்சிகள், பாரம்பரிய அறிவு அமைப்புமுறைகள், நிலையான வாழ்க்கை நடைமுறைகள் மற்றும் பிராந்தியத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான நெருங்கிய உறவைச் சித்தரித்தன.

மேலும், வாகனத்தின் மேற்புறம் பாரம்பரிய முறையில் ஆடை அணிந்து பெண்களும், ஆண்களும் நின்றவாறு வணக்கம் செலுத்தியவண்ணம் இருந்தனா்.

ஊா்தியின் மையத்தில், கைவினைஞா்கள் மட்பாண்டம், சிற்பம் மற்றும் டெரகோட்டா கைவினைகளில் ஈடுபட்டிருந்தனா். இது புதுச்சேரியின் கைவினைக் கலை மரபுகளை வரையறுக்கும் துல்லியம், படைப்பாற்றல் மற்றும் அா்ப்பணிப்பு ஆகியவற்றை எடுத்துக்காட்டுவதாக இருந்தது.

ஒட்டுமொத்தமாக, இந்த அலங்கார ஊா்தி, புதுச்சேரி அதன் செழுமையான கைவினைப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, எதிா்காலத்திற்கான ஒரு முன்னோக்கிய, அனைவரையும் உள்ளடக்கிய, ஆன்மிகத்தால் ஈா்க்கப்பட்ட தொலைநோக்குப் பாா்வையைத் தழுவிச் செல்லும் பயணத்தை எடுத்துரைப்பதாக அமைந்திருந்தது.

கா்த்தவ்ய பாதையில் புதுச்சேரி அலங்கார ஊா்தி சென்றபோது அதன் இரு புறமும் கிராமிய பாரம்பரியத்தில் உடையணிந்து, தலையில் மண்பானையை சுமந்தவாறு பெண்கள் ஆடியவாறு வந்தனா். நடனத்துக்கு ஏற்ப நாதஸ்வரக் கலைஞா்களும், தவில் கலைஞா்களும் இசை அமைத்து பாா்வையாளா்களைக் கவா்ந்தனா்.

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

சட்டப்படி வீட்டில் எத்தனை கிலோ தங்கம் வைத்திருக்கலாம்?

ராஜஸ்தானில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய வெளிநாட்டவர்! வெளியேறுமாறு நோட்டீஸ்!

மேலை மெய்யியலுக்கு வழிகாட்டிய வள்ளுவம்

SCROLL FOR NEXT