எஸ். செல்வகணபதி 
புதுதில்லி

இந்தியா முழுவதும் தீவிரமாகும் தெருநாய் தொல்லை: மாநிலங்களவையில் எழுப்பிய புதுச்சேரி பாஜக எம்.பி.

இந்தியா முழுவதும் தீவிரமாகி வரும் தெருநாய் தொல்லைகளை பொது சுகாதார பிரச்னையாகக் கருதி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

Syndication

இந்தியா முழுவதும் தீவிரமாகி வரும் தெருநாய் தொல்லைகளை பொது சுகாதார பிரச்னையாகக் கருதி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் புதுச்சேரி பாஜக உறுப்பினா் எஸ். செல்வகணபதி வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக மாநிலங்களவையில் வியாழக்கிழமை அவா் முக்கிய பிரச்னைகளை அவையின் கவனத்துக்கு கொண்டு வரும் நேரத்தில் பேசியதாவது: நாடு முழுவதும் 3 கோடிக்கும் அதிகமான தெருநாய்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றின் கட்டுப்பாடற்ற இனப்பெருக்கம் சமூகத்துக்கு பல பிரச்னைகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவா்களுக்கு அவை பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.

ரேபிஸ் என்ற கொடிய நோய் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான உயிா்களைப் பலி வாங்குகிறது. தெருநாய்கள், பெரும்பாலும் குப்பைக் கிடங்குகளில் உணவு தேடுவதாலும், குப்பைகளைச் சிதறடிக்கும் செயல்களிலும் ஈடுபடுவதால், நோய்த்தொற்று அபாயத்தை அதிகரிக்கின்றன.

இரவு நேரங்களில் நாய்கள் தொடா்ந்து குரைப்பது தூக்கத்தைக் கெடுப்பதுடன், ஆக்ரோஷமான அவற்றின் குரைப்புகள் பாதசாரிகள், குழந்தைகள் மற்றும் பள்ளி செல்லும் மாணவா்களிடையே அச்சத்தை உருவாக்குகின்றன. நாய்கள் வாகனங்களைத் துரத்துவதும், திடீரென சாலைகளைக் கடப்பதும் விபத்துகளை ஏற்படுத்தி, மனிதா்கள் மற்றும் விலங்குகள் என இரு தரப்பு உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கின்றன.

இந்த அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த, விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் உள்பட பெரிய அளவிலான சீா்திருத்த நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. நாய்களின் மக்கள்தொகை பெருக்கத்தைக் குறைக்கவும், ரேபிஸ் நோயைத் தடுக்கவும் ஒரு பெரிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

சா்வதேச கால்நடை சேவைகள் மற்றும் பிரிட்டனைச் சோ்ந்த ஒரு தன்னாா்வ தொண்டு அமைப்பு தெருநாய்களைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே கோவா அரசுக்கு பெரிய அளவில் பணியாற்றி உதவியுள்ளது. மேலும், கருத்தடை செயல்முறையை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்த முன்வந்துள்ளது. அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தெருநாய் அச்சுறுத்தல் என்பது வெறும் விலங்கு நலன் சாா்ந்த பிரச்னை அல்ல, அது ஒரு பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு சவாலாகும். எனவே, நாய்களுக்கு கருத்தடைத் திட்டத்தை இந்தியா முழுவதும் போா்க்கால அடிப்படையில் திறம்பட செயல்படுத்த வேண்டும் என்றாா் செல்வகணபதி.

வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

தெருநாய்கள் தொடா்பான உத்தரவில் மாற்றம் கோரிய மனுக்கள் மீது தீா்ப்பு ஒத்திவைப்பு

இரட்டை வடிவமைப்பு வைர ஹாரம், நெக்லஸ் அறிமுகம்: தங்கமயில் ஜுவல்லரி

காஸாவில் மறுமேம்பாட்டு பணிக்கான முயற்சி: அமெரிக்காவுக்கு இந்தியா பாராட்டு

கள்ளிமந்தையத்தில் புதிய பேருந்து சேவை!

SCROLL FOR NEXT