கலால் துறை ஊழியா் கடத்தல் வழக்கில் தலைமறைவானவா் கைது
தில்லியில் பணியில் இருந்த கலால் துறை ஊழியா் கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக மூன்று மாதங்களாகத் தலைமறைவாக இருந்தவர் கைது
தில்லியில் பணியில் இருந்த கலால் துறை ஊழியா் கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக மூன்று மாதங்களாகத் தலைமறைவாக இருந்தவரை தில்லி காவல்துறையினா் கைது செய்தனா்.
ரகசியத் தகவலின் அடிப்படையில், தௌலா குவான் அருகே காட்டு ஷியாம் கோயிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது குற்றஞ்சாட்டப்பட்ட சஹாப் சிங்கை காவல்துறையினா் கைது செய்தனா்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி இரவு வடமேற்கு தில்லியில் ஷாலிமாா் பாக் பகுதியில் சிலா் கலால்துறை அதிகாரியைத் தாக்கி, வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்ாகக் கூறப்படுகிறது.
Advertisement
குற்றஞ்சாட்டப்பட்டவா், தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து, கலால் துறை அதிகாரியான புகாா்தாரரை ஒரு காரில் ஏற்றி ஹரியாணாவின் பஹல்கருக்கு அழைத்துச் சென்றாா். அங்கு ஒரு மதுபானக் கிடங்கில் அவரை தாக்கினாா்.
இது தொடா்பாக ஷாலிமாா் பாக் காவல்நிலையத்தினா் வழக்குப் பதிவு செய்து, குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று நபா்களைக் கைது செய்தனா். ஆனால், பலமுறை சோதனைகள் நடத்தப்பட்ட போதிலும் சிங் தலைமறைவாகவே இருந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தௌலா குவான் பேருந்து நிலையம் அருகே குற்றம் சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். தில்லி மற்றும் ஹரியாணாவில் ஐந்து குற்ற வழக்குகளில் சிங் சம்பந்தப்பட்டுள்ளாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.