முகப்பு
நூல் அரங்கம்

கிராம தேவதைகளும் ஆவிகளும்

கிராம தேவதைகளும் ஆவிகளும் - விக்கிரவாண்டி வி.ரவிச்சந்திரன்; பக்.80; ரூ.40; மேகதூதன் பதிப்பகம், சென்னை-5; )044-42155990. எப்போதோ வாழ்ந்த நல்ல மனிதர்களைத்தான் கிராம தேவதைகளாக மக்கள் வழிபடுகின்றனர் என்கி

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:08 AM
பகிர்:

கிராம தேவதைகளும் ஆவிகளும் - விக்கிரவாண்டி வி.ரவிச்சந்திரன்; பக்.80; ரூ.40; மேகதூதன் பதிப்பகம், சென்னை-5; )044-42155990.

எப்போதோ வாழ்ந்த நல்ல மனிதர்களைத்தான் கிராம தேவதைகளாக மக்கள் வழிபடுகின்றனர் என்கிறார் நூல் ஆசிரியர். அவர்கள் மற்றவர்களுக்குச் செய்த உதவிகள், அவர்களுக்கு மக்கள் நடத்தும் வழிபாடுகள் ஆகியவற்றால்தான் அந்த நல்ல ஆத்மாக்கள் தெய்வ நிலைக்கு உயர்ந்ததாகவும், அவர்களிடம் வேண்டுதல் நடத்தும் மக்களுக்கு அவர்களின் கர்ம வினைகளுக்கு ஏற்ப ஆத்மாக்கள் உதவுவதாகவும் கூறுகிறார்.

16-ம் நூற்றாண்டில் நடைபெற்ற நவகண்டம் கொடுத்தல் நிகழ்ச்சியை கல்வெட்டு குறிப்புகளின் ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளார். பண்டைய காலத்தில் அரசனின் சேனையில் உயிர் தியாகம் செய்யும் படை முன்னணி வீரர்களே முனீஸ்வர்கள் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்டதாகக் கூறுகிறார். கொங்கு நாட்டு கிராம தேவதை பட்டத்தலைச்சியம்மன் கோயிலில் காலப்போக்கில் விநாயகர், முருகன், நவக்கிரக சன்னதிகளும் இணைந்து கொண்டது குறித்து நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

ஆவிகள் மூலம் குறி கேட்கும் வழக்கம், கன்னிமார் வழிபாட்டில் இருந்து உருவாகியதாக நீர்த்தகரை கன்னியர்கள் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூப்பெய்தாமல் திருமணம் ஆகாத பெண்களின் வாக்கு பலிக்கும் என்பது ஆண்டாண்டு கால நம்பிக்கை. இத்தகைய பெண்கள் வெள்ளைப் பெண்கள் என்று அழைக்கப்பட்டதாகவும், கிராமங்களில் இன்றளவும் பெண்கள் மட்டுமே வழிபாடு நடத்தும் வெள்ளைப் பிள்ளை வழிபாட்டையும் பூவாத நாச்சியார் அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கிராம தேவதைகள் குறித்து பல்வேறு கிராமங்களில் கள ஆய்வு மேற்கொண்டு எழுதியுள்ள இந்த நூலில் செப்பேடு, சிலைகள், கல்வெட்டுச் சான்றுகள் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவற்றின் படங்களையும் பிரசுரித்திருந்தால் படிப்பவர்களை நூல் இன்னும் பிரமிக்க வைத்திருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments