நூல் அரங்கம்

ஸ்ரீஆதிசங்கரர் அருளிய சிவகளிப் பேரலை (சிவானந்த லஹரீ)

ஸ்ரீஆதிசங்கரர் அருளிய சிவகளிப் பேரலை (சிவானந்த லஹரீ) - பத்மன்; பக்.144; ரூ.60; ஸ்ரீ எம் பி பப்ளிஷர்ஸ், சென்னை-4;) 044-2847 5333.

பத்மன்

ஸ்ரீஆதிசங்கரர் அருளிய சிவகளிப் பேரலை (சிவானந்த லஹரீ) - பத்மன்; பக்.144; ரூ.60; ஸ்ரீ எம் பி பப்ளிஷர்ஸ், சென்னை-4;) 044-2847 5333.

ஆதிசங்கரர் அருளிச்செய்த "சிவானந்த லஹரீ' எனும் வடமொழிப் பாடல்களை(100) தமிழ்க் கவிதைகளாக்கி, அதற்கு விளக்கமும் தந்துள்ளார் நூலாசிரியர். அதுமட்டுமல்ல, ஆதிசங்கரர் அருளிய "நிர்வாண ஷட்கம்' (விடுதலை ஆற்றுப்படை) விளக்கத்துடன் இறுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவசக்தி வணக்கம் தொடங்கி, சிவபெருமானின் பெருமையையும், சிறப்பையும், மாண்பையும் கூறி, நூல் முழுவதும் சிவன் புகழ்பாடும் ஆதிசங்கரரின், 61-ஆம் பாடலில் பக்தியின் இலக்கணமாக, ""அங்கோலம் நிஜபீஜஸந்ததி ரயஸ்காந்தோபலம் ஸþசிகா'' என்ற பாடலுக்கு, "அழிஞ்சலை விதைகளும் காந்தத்தை ஊசியும்; அகத்தோனை நாயகியும் மரத்தினைக் கொடியும்; ஆழ்கடலை நதியும் அடைந்திடுமே - நாட்டத்தால்; அதுபோல்நின் மலரடிகள் மனம் நிலைத்தல் பக்தியாமே' எனத் தமிழ்ச் செய்யுள் வடிவிலும்; அதற்கு, ""இறைவனது அருளாகிய கற்பக விருட்சத்தின் பலன் கிடைக்க, பக்தியே வித்து. பக்திக்கு ஓர் இலக்கணம் உண்டு. அது எப்படி இருக்க வேண்டும்? அங்கோலம் எனப்படும் அழிஞ்சல் மரத்தினுடைய விதைகள், எவ்வளவு தொலைவு போனாலும், தாய் மரம் இருக்கும் இடத்தைத் தேடி வந்துவிடுமாம். காந்தக்கல்லை நோக்கி இரும்பு ஊசி தானாகவே ஈர்க்கப்படுகிறது. தன்னுடைய மனத்தினில் வரித்துக்கொண்ட நாயகனை, நாயகி தேடி இணைகிறாள். மரத்தினைக் கொடி, விருப்பத்துடன் தழுவிக் கொள்கிறது. எங்கோ தோன்றி, எங்கெங்கோ ஓடினாலும் ஆழ்கடலை நதி தேடி அடைகிறது. அதுபோன்ற ஆவலுடன், ஈர்ப்புடன், ஆர்வத்துடன், காதலுடன் இறைவனாம் சிவபெருமானின் மலர்ப்பாதங்களை மனத்தினுள் நிலைக்கச் செய்வதே - சதா நினைத்துக்கொண்டிருப்பதே பக்தியாகும் என்கிறார் ஆதிசங்கரர்'' என்று பாடலின் விளக்கத்தையும் எளிமையாக்கித் தந்திருக்கும் விதம் அருமை. இந்நூலின் சிறப்புக்கு இந்த ஒரு பாடலே போதுமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கத்தாகுறிச்சியில் காசநோய் எதிா்ப்பு வார உறுதிமொழி

நகை திருட்டு வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கியதில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

பண மோசடி வழக்கு: 3 ஆண்டுகள் சிறை தண்டனை

அமைச்சா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணை மாா்ச் 3-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT