நூல் அரங்கம்

விநாயகப் பெருமானின் மகிமையும் திருக்கோயில்களும்

விநாயகப் பெருமானின் மகிமையும் திருக்கோயில்களும் - சாந்தா வரதராஜன்; பக்.520; ரூ.250; சாந்தா வரதராஜன் பதிப்பகம், ஜி-1, நாதன்ஸ் ஆகாஷ், புது எண்: 10, இலட்சுமி தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33.

சாந்தா வரதராஜன்

விநாயகப் பெருமானின் மகிமையும் திருக்கோயில்களும் - சாந்தா வரதராஜன்; பக்.520; ரூ.250; சாந்தா வரதராஜன் பதிப்பகம், ஜி-1, நாதன்ஸ் ஆகாஷ், புது எண்: 10, இலட்சுமி தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33.

விநாயகர் அவதார மகிமை, பிள்ளையார் புராணம் பற்றிய தகவல்கள், விநாயர் உருவம் உணர்த்தும் தத்துவம், தோப்புக்கரணம், தலையில் குட்டிக்கொள்ளலின் அர்த்தங்கள் ஆகியவை இந்நூலில் விவரமாகத் தரப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி பண்டிகை, சதுர்த்தி விரதம் மற்றும் விநாயகர் விரதங்களின் பலன்கள், விநாயகர் விரும்பும் வன்னி இலை மற்றும் அறுகம்புல்லின் மகத்துவம், விநாயகரை அர்ச்சிக்க உதவும் இலைகளின் பெயர்கள், காணாபத்யம் எனப்படும் கணபதி வழிபாட்டில் செய்யப்படும் ஹோமங்கள், பூஜைகள், நித்ய பூஜை செய்வதன் பலன்கள், விநாயகரின் திருநாமங்கள் அதன் புராணத் தகவல்கள் எல்லாம் சொல்லப்பட்டிருக்கின்றன.

விநாயகப் பெருமானின் பிரசித்திபெற்ற 108 திருக்கோயில்கள், விநாயகரின் விநோதமான திருப்பெயர்கள், கண்திருஷ்டி கணபதி, இரட்டை பிள்ளையார் வழிபாட்டின் சிறப்புகள் எல்லாம் படிக்க படிக்க அதிசயிக்க வைக்கின்றன. உச்சிப்பிள்ளையார், வாதாபி கணபதி, பிள்ளையார்பட்டி, வேலூர் சேண்பாக்கம், உப்பூர், ஸ்ரீ வில்லிப்புத்தூர் மற்றும் ஆந்திர மாநிலம் காசிப்பேட் ஆகிய தலங்களில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெருமைகள், தலங்களின் சிறப்புகள் தனித்தனியாகச் சொல்லப்பட்டிருப்பது அருமை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT