முகப்பு
நூல் அரங்கம்

வானகம் இங்கு தென்பட வேண்டும்

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
பகிர்:

வானகம் இங்கு தென்பட வேண்டும் - எஸ்.கிருஷ்ணஸ்வாமி; பக்.464; ரூ.470; அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை-4; 044-24641314.

டாக்டர் கிருஷ்ணஸ்வாமி, மருத்துவ விஞ்ஞானி மோகனா தம்பதியின் சுயசரிதையே இந்நூல்.  இந்தியாவின் செறிவான பன்முகத்தன்மையை எடுத்துக் காட்டும் விதமாக 5 ஆயிரம் ஆண்டு வரலாறு, 'இந்து சமவெளி முதல் இந்திரா காந்தி வரை' என்ற உலகப் புகழ்பெற்ற ஆவணப்படத்தை நூலாசிரியர் தயாரித்தார். நிதிச்சுமை, அரசியல் கட்சிகள், அவசரநிலை பிரகடனம், ஆட்சி மாற்றம், ஆவணப்படத்தின் மீதான அலட்சியம் உள்ளிட்ட காரணங்களால் நூலாசிரியர் எவ்வாறெல்லாம் சோதனைக்கு ஆளாகினார் என்பதையும், அதை அவர் திறம்பட எதிர்கொண்ட விதம் குறித்தும் இந்நூல் விரிவாக பதிவு செய்துள்ளது.

அளப்பரிய திறமையிருந்தும்,  இட ஒதுக்கீட்டு கொள்கையால் மோகனாவின் மருத்துவ விஞ்ஞானியாகும் கனவு தகர்ந்தது நாட்டுக்கான இழப்பும்கூட! ராணுவம், நீதித்துறையில் இட ஒதுக்கீடு இல்லாததுபோல அறிவியல் ஆராய்ச்சியிலும் திறன் சார்ந்து மட்டுமே வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கேற்றாற்போல சட்டத்திலும் வகை செய்ய வேண்டுமெனவும் நூலாசிரியர் வலியுறுத்துகிறார்.

சுயசரிதையின் வழியே ஆவணப்படம், திரைப்படம், தொலைக்காட்சித் தொடர், இந்திய வரலாறு, மருத்துவ ஆராய்ச்சிகளில் நிலவும் முறைகேடுகள் உள்ளிட்டவை குறித்து பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ள முடிகிறது.

முற்றிலும் வெவ்வேறான துறைகளைச் சேர்ந்த தம்பதிக்கு இடையே எழும் மனக்கசப்புகள், கருத்து வேறுபாடுகளால் பிரிந்துவிடாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும், அதற்கு அடிநாதமாக இருவருக்கும் இடையே ஆழமான அன்பு பிணைப்பு உருவாக்கப்பட வேண்டியதன் தேவையையும் இந்நூல் எடுத்தியம்புகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →