ஒரு கிராமத்து ராஜா
ஒரு கிராமத்து ராஜா - கவிஞர் ரவிதாசன்; பக் 144 ; ரூ. 150 ; கவிவாணர் பதிப்பகம், சென்னை 39 ; ✆ 80728 79617.
தேனி மாவட்டம் பண்ணைப்புரத்திலிருந்து 'அன்னக்கிளி' படம் வரையிலும் இளையராஜாவின் வெற்றி வரலாற்றை, அதற்காக அவர் பட்ட இன்னல், உழைப்பு, முயற்சி, உயர்வு, தாழ்வு எல்லோரும் உணர்ந்திடும் வகையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.
இளையராஜாவின் பெற்றோர் கங்காணி ராமசாமியும், சின்னத்தாயும் சிறந்த பாடகர்கள், சென்னைக்கு வந்த பிறகு முதல்முதலில் சங்கிலி முருகன் நடத்திய ' மாசற்ற மனம்' என்ற நாடகத்தில் கிடைத்த முதல் வாய்ப்பு, பாடகி கமலாவால்தான் தன்ராஜ் மாஸ்டரிடம் இசை கற்றுக் கொள்ளத் தொடங்கியது, பஞ்சு அருணாசலத்திடம் இளையராஜாவை அறிமுகப்படுத்தியவர் கதாசிரியர் ஆர். செல்வராஜ், இளையராஜா உயர்வடைவதற்கு காரணமாக இருந்த ஜி.கே. வெங்கடேஷ், பாரதிராஜா உள்ளிட்டோர் குறித்த அரிய தகவல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, இளையராஜாவின் சகோதரர்கள் பாவலர் வரதராஜன், பாஸ்கர், அமர், இசைப் பயணத்தில் முக்கிய இடம் பிடித்த மறைந்த பாடகர் எஸ்.பி.பி. உள்ளிட்ட பலரையும் இந்த நூலின் வாயிலாக அறிமுகம் செய்து வைக்கிறார் நூலாசிரியர். அனைவரும் படிக்க வேண்டிய அற்புத நூல் இது.