எளிய தமிழில் சோழர் வரலாறு - (மூலம் - மா.இராசமாணிக்கனார்; எளிய தமிழில்- அச்சுதன் ஸ்ரீதேவ்); பக். 248; ரூ.270; சுவாசம், சென்னை-127; ✆ 81400 66645.
மூன்று பிரிவுகளைக் கொண்டது இந்த நூல். "சோழர்' என்ற சொல்லுக்கு பொருள் தேட முயன்று, நீர் 'சூழ்நாடு' என்பதே நாளடைவில் சோழநாடானது என்று நூலாசிரியர் விளக்குகிறார். முற்காலச் சோழர்கள், சங் க காலச் சோழர்கள், எழுச்சி பெற்ற சோழர்கள், பிற்காலச் சோழர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
முற்காலச் சோழர்கள் வரிசையில் சிபி, முசுகுந்தன், காந்தன், செம்பியன், இளஞ்சேட்சென்னி, கரிகாலன் ஆகியோரது வரலாறுகள் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
சங்கக் காலச் சோழர்கள் வரிசையில் சோழன் நலங்கிள்ளி, கிள்ளிவளவன், கோப்பெருஞ்சோழன், நெடுமுடிகிள்ளி ஆகியோரின் வரலாறுகளும் உள்ளன.
சோழர்களின் வீரம், அவர்களது போர்கள், கொடை, கட்டடக் கலை, சிற்பக் கலை, கல் மற்றும் உலோகங்களில் அவர்களது திறமை, சிறிய- பெரிய கற்கோயில்கள், அவர்களது காலத்து மக்கள், கலை, கலாசாரம் எல்லாம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது.
போர்கள் என்றால் கடற்போர்களில் அவர்களது அறிவு, அதன் பயன்பாடு கடல் கடந்து சென்று ஆட்சிப் பகுதியை விரிவு செய்த நிலையில், தங்களது கலைகளை ஆட்சி நிர்வாகத்தை நிறுவுதல் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளன. வரலாற்று அறிஞர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் வாழ்த்துரை மகுடம்.
சரித்திரத்தில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு இந்த நூல் உவப்பாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.