நூல் அரங்கம்

விகடன் தீபாவளி மலர்

DIN

விகடன் தீபாவளி மலர் - தி.முருகன்; பக்.400; ரூ.180 ; ஆனந்த விகடன் பப்ளிஷர்ஸ், சென்னை-2;  ✆ 044-66802907.

சிருங்கேரி  சாரதா பீட  சங்கராச்சாரியார்  ஸ்ரீபாரதி தீர்த்த மஹா ஸ்வாமிகளின் 'தீபாவளி போதிக்கும் பாடங்கள்' அருளுரையுடன் மலர் தொடங்குகிறது. 'வினைகள் தீர்ப்பார் விநாயகர்', 'நம்மைக் காக்கும் ஸ்ரீசாரதாம்பிகை', 'வேங்கடவா துயில் எழுவாய்', 'ஐம்பெரும் தெய்வம் செந்திலாண்டவன்', 'செல்வம் அருளும் கோமாதா' என ஓவியர் பிரேம் டாவின்ஸியின் ஓவியங்களும்- இதற்குப் பொருத்தமான கட்டுரைகளும் மலருக்கு சிறப்பு சேர்ப்பதுடன் 'பிள்ளையாய் வந்த பெருமாள்'  கட்டுரையோ கும்பகோணம் சாரங்கபாணி கோயிலைப் படம்பிடிக்கிறது. 

நூற்றாண்டு நாயகர்களான கி.ரா., கு.அழகிரிசாமி இருவரையும் பற்றி கார்த்திக் புகழேந்தி எழுதிய ஒப்பீட்டுக் கட்டுரை வித்தியாசமானது. கல்யாண்ஜி- கலாப்ரியா தொடங்கி, இளம் கவிஞர்களின் நவ கவிதைகள், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சுபா தொடங்கி இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகள், அருணா சாய்ராம், ஏ.கே.பழனிவேல், சீர்காழி சகோதரிகள், ரஞ்சனி- காயத்ரி உள்ளிட்ட இசைக்கலைஞர்களின் நேர்காணல்கள் படிக்க சுவை. 

மலரின் அழகுக்கு அழகு சேர்க்கும் காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் பேட்டியும் அந்தக் காலத்துக்கு இட்டுச் செல்கிறது. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, இஸ்ரோவின் பயணக்கதை, இங்கிலீஷ் காய்கறிகள், யுகபாரதியின் உப்புக் கட்டுரை மனதில் பதியும். இருவர் மட்டுமே வசிக்கும் குச்சம்பட்டி கிராமம், சிப்ஸ் தயாரிப்பில் செல்வச் செழிப்பில் திளைக்கும் சிகரலஹள்ளி கிராமம் குறித்த கட்டுரைகளும் அபாரம்.  இலக்கியம், ஆன்மிகம், பண்பாடு, சின்னத்திரை, பெரிய திரை என சரியான விகிதத்தில் தயாரிக்கப்பட்ட நல்லதொரு மலர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT