நூல் அரங்கம்

காட்சிகள்! கட்டுரைகள்!!

பல முக்கிய கோயில்களின் வரலாறு, சிறப்புகள் விளக்கப்பட்டுள்ளன. ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறைக்குச் சென்ற அனுபவம், அன்றைய சிறை நிலவரம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

காட்சிகள்! கட்டுரைகள்!!- மருத்துவர் பா.சேஷாசலம்; பகுதி 1- பக்.199, ரூ.250; பகுதி 2-பக்.175, ரூ.200; மணிவாசகர் பதிப்பகம், சென்னை- 600 021; ✆ 93805 30884.

மருத்துவர், எழுத்தாளர், கவிஞர், நடிகர், நடனக் கலைஞர், பாடகர், பேச்சாளர், தமிழ் ஆர்வலர், சமூக சேவகர் என பன்முகத் திறமைகளுக்குச் சொந்தக்காரரான நூலாசிரியர் தனது பயண அனுபவத்தில் கண்ட காட்சிகளை 47 கட்டுரைகளாக்கியுள்ளார்.

சமூக ஊடகங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்தி, நல்லதொரு வழிகாட்டுதல்களை வழங்கி வரும் நூலாசிரியர் எழுதிய நூல்கள் குறித்து விளக்கம் தர வேண்டியதில்லை. தனி மனிதனையோ அல்லது தன்னைச் சார்ந்தவர்களையோ புகழ்பாடாமல், கண்ட காட்சிகளையும், அங்குள்ள வரலாற்றையும் தொகுத்து நூலாக்கியுள்ளார்.

அமெரிக்கா, துபை போன்ற நாடுகளில் உள்ள முக்கிய இடங்களின் சிறப்புகள், சென்னை, கோவை, கடலூர், ஏற்காடு, சேலம், மேகமலை, திருவானைக்கா போன்ற இடங்களின் சிறப்புகளுடன் தனது அனுபவத்தையும் நூலாசிரியர் பகிர்ந்துள்ளார்.

தனது தாயின் கடிதங்கள், பெண்ணியம், குளோனிங் குழந்தை போன்றவை குறித்த கட்டுரைகள் மனித நேயத்தை வெளிப்படுத்தும் வகையில், குடும்ப உறவின் முக்கியத்துவத்தை உணர வைக்கிறது. வழிபாட்டுத் தலங்கள், திருவிழாக்கள், மலைகள், நீர்வீழ்ச்சிகள், வனப் பகுதியின் நிலை குறித்த தகவல்களைப் படிக்கும் போது, அவற்றை நேரில் காண வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

பல முக்கிய கோயில்களின் வரலாறு, சிறப்புகள் விளக்கப்பட்டுள்ளன. ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறைக்குச் சென்ற அனுபவம், அன்றைய சிறை நிலவரம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காவிரியில் தொடரும் ஆபத்து பயணம் காத்திருப்பில் ஒட்டனூா்- கோட்டையூா் பால அறிவிப்பு!

பேருந்தை மறித்து கிராமமக்கள் போராட்டம்

நாகை நகராட்சியை கண்டித்து தவெக ஆா்ப்பாட்டம்

நாரைக்கிணறு பகுதியில் மக்கள் சந்திப்புக் கூட்டம்: அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்பு

முன்னாள் படை வீரா் நல அலுவலக வாகனம் டிச.30-இல் ஏலம்

SCROLL FOR NEXT