முகப்பு
நூல் அரங்கம்

சிற்பம் பேசும் வான்புகழ் வள்ளுவர் கோட்டம்

திருக்குறளின் மூன்று அதிகாரங்களை மையப்படுத்தி மிக நுணுக்கமாக வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டதை நூலாசிரியர் விவரிக்கிறார்.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

சிற்பம் பேசும் வான்புகழ் வள்ளுவர் கோட்டம் - கோ. வீரபாண்டியன்; பக்.190; ரூ.250; சத்யா எண்டர்பிரைசஸ், சென்னை-94; ✆ 044-4507 4203.

ஒரு வரலாற்றுப் பணியாக வள்ளுவர் கோட்டம் எழுந்த விதத்தை நூல் விவரிக்கிறது. வள்ளுவர் கோட்டம் தமிழர் கட்டடக் கலைக்கு சான்றாக வடிவமைக்கப்பட்டது.

திருக்குறள் முப்பாலைக் கூறுகிறது. அதன்பொருட்டு வள்ளுவர் கோட்டத்தின் முக்கியப் பகுதிகள் மும்மூன்றாகப் பகுக்கப்பட்டுள்ளன. கோட்ட அரங்கம், குறள் மணிமாடம், வேயா மாடம் என அரங்கம் மூன்று அடுக்குகளைக் கொண்டது.

வள்ளுவர் திருத்தேரின் அடிப்பகுதி, வள்ளுவர் திருவறை அமைந்துள்ள நடுப்பகுதி, கூறை என மூன்று நிலைகளைக் கொண்டது.

குறள் மணிமாடத்தில் அறத்துப்பால் கருநிறப் பளிங்கிலும், பொருட்பால் சாம்பல் நிறப் பளிங்கிலும், காமத்துப்பால் செந்நிறப் பளிங்கிலும் செதுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு திருக்குறளின் மூன்று அதிகாரங்களை மையப்படுத்தி மிக நுணுக்கமாக வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டதை நூலாசிரியர் விவரிக்கிறார்.

பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் அப்போது நடைமுறையில் இல்லை என்பதால், வீரமாமுனிவரின் காலத்து தமிழே பதிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்றபின், மாமல்லபுரத்துக்குச் சென்ற நிலையில், அங்குள்ள சிற்பிகள் படித்துவிட்டு வேலையற்று இருப்பதைக் கூறியதும், இந்த சிற்பிகளுக்கு மாத்திரமல்லாமல், தமிழகத்தில் உள்ள அனைத்து சிற்பிகளின் திறமைகளைப் பறைசாற்றும்விதமாக பூம்புகார் கலைக்கூடம், வள்ளுவர் கோட்டம் உள்ளிட்டவை வரலாறுகளாக வாழ்கின்றன.

'ஒரு சமுதாயத்தின் கலை, பண்பாடுகள் பேணிக் காக்கப்பட வேண்டும். இந்தப் பொறுப்பு அரசுக்கு இருப்பதால்தான் வள்ளுவர் கோட்டத்தை இங்கே உருவாக்க முனைந்திருக்கிறோம்' என அதன் கால்கோள் விழாவில் அப்போதைய முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

வள்ளுவர் கோட்டத்தின் தோற்றமும் வளர்ச்சியும் தொடங்கி காலம் கடந்த எனது பார்வை ஈறாக 8 தலைப்புகளில் வள்ளுவர் கோட்ட படைப்பு நிகழ்வுகள் மற்றும் 133 அதிகாரங்களுக்கும் சிற்பங்களைக் கொண்டு குறள் விளக்கக் காட்சி அற்புதமாக விவரிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →