நெருஞ்சிமலர்க் காட்டிடையே... - மன்னர்மன்னன்; பக்.216; ரூ. 300; கோ. பாரதி, புதுச்சேரி; ✆ 94867 48522.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்க்கை நிகழ்வுகளை நினைவுகூர்ந்து அவருடைய மகன் மன்னர்மன்னன் எழுதிய, வெளிவராத கட்டுரைகளையும் சேர்த்துப் பெயரன் கோ. பாரதி தொகுத்து நூலாக்கித் தந்திருக்கிறார். 'கறுப்புக் குயிலின் நெருப்புக் குரல்' என பாரதிதாசன் வாழ்க்கை வரலாற்றை எழுதிய மன்னர்மன்னன், சொல்ல இயலாமல் போனவற்றை, பின்னால் நினைத்துப் பார்த்தவற்றைத் தொடராகவும் தனித்தனியாகவும் கட்டுரைகளாக எழுதியிருக்கிறார்.
நெருஞ்சிமலர்க் காட்டிடையே என்பதற்கான விளக்கத்தை முதல் கட்டுரையிலேயே விளக்கி, பாரதிதாசனையும் அறிமுகப்படுத்திவிடுகிறார். மிலிட்டரி ஹோட்டலில் கத்தரிக்காய், புடலங்காய் பரிமாறியதற்கான எதிர்வினையிலேயே பாரதிதாசன் 'பளிச்'செனத் தெரிகிறார்.
பாரதிதாசன் பாடல்களில் ஏற்பட்டுவந்த மாற்றங்களையும் அவற்றுக்கான நோக்கத்தையும் விளக்கும் ஆசிரியர், தெ.பொ.மீ.யுடனான மோதலை விளக்குகிறார். தொடர்ந்து, தமிழ் அறிஞர்களை ஏன் சாட வேண்டும்? என்ற கேள்விக்கு, 'தனிப்பட்ட எந்தப் பகையும் எவரிடத்தும் எனக்கில்லை; தமிழ் மொழிக்கு அவர்கள் தீமை புரிவதாக நான் கருதினால் எனது எதிர்ப்பையோ, கண்டனத்தையோ தெரிவிக்காவிடில், அந்தக் குற்றத்துக்கு நான் துணை போகிறேன்' என்றாகிவிடும் என்ற பாரதிதாசனின் பதிலைப் பதிவு செய்திருக்கிறார்.
நூல் நெடுகிலும் பாரதிதாசனின் துணைவியார் பழநியம்மா எந்த அளவுக்கு அவருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார் என்பதற்கான உருகச் செய்யும் பல நிகழ்வுகள் உள்ளன. கடன் வாங்கி பாரதிதாசன் தூத்துக்குடி சென்றதும் வி.வி. தனுஷ்கோடி நாடாரின் சந்திப்பையும் விளக்குகிற ஆசிரியர், கூடவே, ராவணன் மீசை பற்றிய பாரதிதாசனின் நகைச்சுவையையும் நினைவுகூர்கிறார். இவ்வாறாக, பாரதிதாசன் வாழ்க்கையில் நிகழ்ந்த சுவையான சம்பவங்கள் ரசிக்கும்படியாக எழுதப்பட்டிருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.