நூல் அரங்கம்

அடங்காத மனதை ஜெயிப்பது எப்படி?

இந்த நூலைப் படித்து முடித்தவுடன் மன அமைதியோடு பிரச்னைகளின்றி, ஒதுங்கி வாழ வேண்டும் என்பதை உணரவைக்கிறது.

தினமணி செய்திச் சேவை

அடங்காத மனதை ஜெயிப்பது எப்படி?- சஹாநாதன்; பக்.212; ரூ.220; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-600 017; ✆ 91764 51934.

மனமும், உடலும் நலமாக இருந்தால்தான் நலமுடன் உயிர் வாழ முடியும். உடல் நலம் பாதித்தால் பாதுகாக்க மருத்துவர்கள் வழிகாட்டுவார்கள். ஆனால், மனம் பாதிக்கப்பட்டால்? அவரவர் தங்களது மனங்களைக் கட்டுப்படுத்துவதுதான் இதற்கு ஒரே வழி. விநாடிக்கு விநாடி மாறிக் கொண்டிருக்கும் மனதைக் கட்டுப்படுத்துவது எளிதல்ல; ஆனால், கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை கூறியிருக்கிறார் நூலாசிரியர்.

துக்கம், துயரம், மதுப் பழக்கத்தை விடுதல், வெற்றிக்கு வழி, ஆனந்த வாழ்க்கை, மகிழ்ச்சியாக இருத்தல், இறைத்தன்மையை அறிதல், காதலைப் புரிந்துகொள்ளுதல், லட்சியத்தை அடைதல், ஏமாற்றுவதைத் தடுத்தல், தன்னம்பிக்கையை இழக்காமல் இருப்பது எப்படி?, மனித வாழ்க்கையின் மகத்துவம், அலுவலக அரசியலுக்கான தீர்வு, சுகமான வாழ்க்கை, யோகாவையும் தியானத்தையும் மெüனத்தையும் மேற்கொள்வதால் கிடைக்கும் பலன்கள், உடற்பயிற்சியின் அவசியம், பிரபஞ்ச ரகசியம், பிரச்னைக்குத் தீர்வுகள், அன்பானவர்களிடம் வெறுப்பு வராமல் இருக்க வழிகள், குடும்ப வாழ்க்கையைச் சுகமாக அமைத்துகொள்ளும் முறைகள், கவலைப்படும்போது என்ன செய்வது, மனநிறைவு பெற வழி என்ன? உள்ளிட்டவற்றுக்கான விஷயங்கள் 60 கட்டுரைகளில் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. நூலை எடுத்தவுடன் முழுமையாகப் படித்துவிட வேண்டும் என்று தோன்றும் அளவுக்கு நல்ல கருத்துகளும், நெறிமுறைகளும் இடம்பெற்றுள்ளன.

'வாழ்க்கை வாழ்வதற்கே?' என்பதையும், அதை உடல் நலத்தோடும் மன வலிமையோடும் வாழ்வதற்கான வழிமுறைகளையும் நூலாசிரியர் எண்ணற்ற தகவல்களாய் அள்ளிக் கொடுத்துள்ளார். இந்த நூலைப் படித்து முடித்தவுடன் மன அமைதியோடு பிரச்னைகளின்றி, ஒதுங்கி வாழ வேண்டும் என்பதை உணரவைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கல் : போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

எச்.சி.எல் 3வது காலாண்டு நிகர லாபம் 11% சரிவு!

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

SCROLL FOR NEXT