நூல் அரங்கம்

நமது இதயங்கள்

எளிய, மத்திய தர பெண்களின் அன்பு அப்பழுக்கற்றது, நிலையானது என்று வலியுறுத்தும் நாவல் இது.

தினமணி செய்திச் சேவை

நமது இதயங்கள்-மாப்பசான்-தமிழில் ரதுலன்; பக்.212; ரூ.230; நடராஜ் பப்ளிகேஷன்ஸ், சென்னை - 600 005, ✆ 98401 68517.

தமிழ் வாசகர்களிடையே 50 ஆண்டுகளுக்கு முன்பு இரு கதைகள் ரொம்ப பிரபலம்- ஓ.ஹென்றியின் "கடைசி இலை', மாப்பசானின் "நெக்லஸ்'. கடைசி இலையில் படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிப் பெண் ஜன்னல் வழியே பார்க்கும் ஒரு செடியின் கடைசி இலை உதிரும் போது, நானும் இறந்து விடுவேன் என்கிறாள். ஓர் ஓவியன் ஓர் இலையின் ஓவியத்தை வரைந்து ஜன்னலுக்கு வெளியே வைத்துவிடுகிறார். அவளது நம்பிக்கை வளர்ந்து ஆயுள் நீள்கிறது.

நெக்லஸ் கதை-விருந்து ஒன்றுக்கு அடுத்த வீட்டுக்காரியின் நெக்லûஸ இரவல் வாங்கி அணிந்து செல்கிறாள். அது காணாமல் போய் விடுகிறது. அதற்கு மாற்றாக கடன் பணத்தில் புதிய நெக்லஸ் வாங்கி உரியவளிடம் ஒப்படைக்கிறாள். வாங்கிய கடனுக்கு அவளது குடும்ப வாழ்க்கையே நாசமாகிறது. இரவலாக வாங்கிய நெக்லஸ் போலி என்று கதையின் இறுதியில் தெரிய வருகிறது. ஆசை, பேராசை, ஆடம்பரம் கூடாது என்று வலியுறுத்தும் கதை இது.

மாப்பசானின் "நமது இதயங்கள்' மிச்சேல் என்கிற பாரீஸ் நகர பேரழகிக்கும் மரியபோல் என்கிற பெரும் செல்வந்தன், எழுத்தாளன், சிற்பிக்கும் ஏற்படும் நட்பு காதலாக மாறுகிறது. ஏற்கெனவே மிச்சேல் திருமணமானவள். கணவரை இழந்த துக்கநாள் கழிந்து அவள் அளிக்கும் விருந்தில் மரியபோல் கலந்து கொள்கிறான். மிச்சேலின் இந்தப் பழக்கத்தை அவனால் ஏற்க முடியவில்லை. அவர்கள் பிரிகிறார்கள்.

மரியபோல் கிராமத்துக்குப் போகிறான். அங்கு தனக்கு உதவியாக இருக்கும் பணியாளர் பெண் எலிசபெத்தின் அன்பு பிடிக்கிறது. அவளுடனே வாழ்கிறான். இடையில் மிச்சேல் மரியபோலை பாரீஸýக்கு அழைக்கிறாள்.

அவன் எலிசபெத்துடன் வருகிறான். அவனிடம் மிச்சேல் "இப்போதுபோல் எப்போதும் என்னை நேசிப்பாயா? என்கிறாள். "நிச்சயமாக' என்கிறான் மரியபோல்.

எளிய, மத்திய தர பெண்களின் அன்பு அப்பழுக்கற்றது, நிலையானது என்று வலியுறுத்தும் நாவல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கள்ளக்குறிச்சி: மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழாவில் சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் பலி!

ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார்.. ‘மை லார்ட்’ பட டிரைலர்..!

சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு பெற வேண்டுமா? நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட அறிவுறுத்தல்!

3வது காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு 7% சரிந்த விப்ரோ!

ஓய்வெடுக்கப் போவதில்லை; ரஞ்சி கோப்பையில் விளையாடும் ஷுப்மன் கில்!

SCROLL FOR NEXT