ஆன்மிகம்

திருப்பதியில் கோகுலாஷ்டமி ஒட்டி விமரிசையாக கோ பூஜை

   திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோசாலையில், கோகுலாஷ்டமியை ஒட்டியை மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தேவஸ்தானம் திருப்பதி கோசாலையில், 12

சி. சுரேஷ்குமார்

திருப்பதியில் கோகுலாஷ்டமியை ஒட்டி திங்கட்கிழமை விமரிசையாக கோ பூஜை  நடைபெற்றது.

     திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோசாலையில், கோகுலாஷ்டமியை ஒட்டியை மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தேவஸ்தானம் திருப்பதி கோசாலையில், 12 வகையான பசுமாடுகளை வைத்து பராமரித்து வருகிறது. அதில், ஓங்கோல், சாஹிவால்,பூங்கனூர், கிர், ஹரியானா, டியோனி, காங்கிரஸ், ஆம்பலாச்சாரி போன்ற பல வகையான பசுக்கள் உள்ளது. இங்கு பராமரிக்கப்படும் பசுக்களிலிருந்து பெறப்படும் பால், தேவஸ்தானத்தின் பல அறக்கட்டளைக்கு விநியோகிக்கப்படுகிறது.

     அதே போல், 450 ஏக்கர் பரப்பளவில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேரி அருகில், புதிய கோசாலையை அமைக்க, தேவஸ்தானம் திட்டமிட்டு வருகிறது. அதனால், தேவஸ்தானம் கோசாலையில் யாகங்கள், கோபூஜைகள் நடத்தி வருகிறது. அதன்படி, திங்கட்கிழமை, கோசாலையில் உள்ள கோபால கிருஷ்ணன் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்து சனாதன தர்மத்தின்படி பசுக்களை காப்பது நம் கடமை என்பதால் கோகுலாஷ்டமி அன்று இந்த சிறப்புப்பூஜையை தேவஸ்தானம் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT