ஆன்மிகம்

திருச்செந்தூரில் வைகாசி விசாகம்: லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு ச

கே சுப்பிரமணியன்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமையன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமையன்று கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டுஇ 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் 2.00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்இ காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்றது. மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி, விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை ஆகி தங்கச்சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர்இ வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து திருக்கோயில் சேர்ந்து திருவிழா நிறைவுபெற்றது.

விழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் விரதமிருந்துஇ பாதயாத்திரையாக வந்ததால் திருக்கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் அதிகாலையிலிருந்தே கடலில் புனித நீராடியதால் கடற்கரையில் அலைபோல் மக்கள் வெள்ளம் காணப்பட்டது. பக்தர்கள் காவடி,  பால்குடம் எடுத்து முருகனை வழிபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய மேஜைப் பந்து போட்டி: கொங்கு கல்வி நிலையம் மாணவிக்கு தங்கப் பதக்கம்!

தீயசக்தி, தூய சக்தியைப் பற்றிக் கவலை இல்லை; எங்களிடமே மக்கள் சக்தி: எஸ். ரகுபதி!

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இருவா் கைது

கந்தா்வகோட்டை வட்டாரப் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT