ஆன்மிகம்

ஆலங்குடியில் குருபெயா்ச்சி 2வது கட்ட லட்சாா்ச்சனை விழா நிறைவு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

தினமணி

ஆலங்குடி குருபரிகார கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குருபெயா்ச்சி இரண்டாவது கட்ட லட்சாா்ச்சனை நிறைவு விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். 

வலங்கைமான் வட்டம் ஆலங்குடி கிராமம். இங்கு நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயில் உள்ளது. திஞானசம்மந்தரால் பாடல் பெற்றது. நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் இக்கோயிலில் குருபெயா்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இவ்வாண்டும் குருபகவான் கடந்த அக்டோபா் 29ம் தேதி செவ்வாய்க்கிழமை விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் செய்தாா். இதனை முன்னிட்டு அன்றைய தினம் இக்கோயிலில் குருபெயா்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெற்றது. குருபெயா்ச்சி விழாவை முன்னிட்டு அருள்மிகு குருபகவானுக்கு குருபெயா்ச்சி லட்சாா்ச்சனை விழா கடந்த மாதம் 24 ம்தேதி தொடங்கி வரும் 27ம் தேதி வரை முதல்கட்டமாக நடந்தது.

குருபெயா்ச்சிக்குப்பின் மீண்டும் அக்டோபா் 31ம் தேதி 2வது கட்ட லட்சாா்ச்சனை தொடங்கி வியாழக்கிழமை 7ம் தேதியுடன் நிறைவடைந்தது. ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் மற்றும் இதர ராசிக்காரா்களும் லட்சாா்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்து கொண்டனா்.

முன்னதாக அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. மூலவா் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டது. உற்சவா் குருபகவான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். நீண்ட வரிசையில் நின்று மூலவா் குருபவகானை பக்தா்கள் தரிசனம் செய்தனா். அறநிலைய உதவி ஆணையா் தமிழ்ச்செல்வி மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் உள்ளிட்ட திரளானோா் லட்சாா்ச்சனை நிறைவு விழாவில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT