ஆன்மிகம்

குருப்பெயர்ச்சியன்று வழிபட வேண்டிய குரு ஸ்தலங்கள்!

குருபகவான் முழுமையான சுபக்கிரகம் என்று அழைக்கப்படுவர். அனைத்து விஷயத்திற்கும்

தினமணி


குருபகவான் முழுமையான சுபக்கிரகம் என்று அழைக்கப்படுவர். அனைத்து விஷயத்திற்கும் குருபகவானுடைய அனுக்கிரகம் என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கிமானதொன்றாகும். 

குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவது வழக்கம். இதனால், அவரவர் ராசிக்கேற்ப பலன்களை அள்ளித்தருவார். அந்தவகையில் 2019-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி அக்டோபர் 29ம் தேதியான இன்று குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பிரவேசித்துள்ளார். 

ஒருவருடைய ஜென்ம ராசியில் இருந்து 2,5,7,9,11 ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும் பொழுது குருபகவான் நற்பலன்கள் அளிப்பார் என்பது பொது விதி. அதன்படி இந்தாண்டு குருப்பெயர்ச்சி 2-ம் இடத்திற்கு வருவதால் விருச்சிகம், 5-ம் இடத்திற்கு வருவதால் சிம்மம், 7-ம் இடத்திற்கு வருவதால் மிதுனம், 9-ம் இடத்திற்கு வருவதால் மேஷம், 11-ம் இடத்திற்கு வருவதால் கும்பம் ஆகிய ராசிகளுக்கு குருபகவான் நற்பலன்களை அள்ளி வழங்கஉள்ளார். 

ஜென்ம ராசியான 1-ம் இடம் மற்றும் 3,4,6,8,10,12 ஆகிய இடங்களில் குருபகவானின் சஞ்சாரம் நற்பலன்களை அளிக்காது என்பது பொது விதியாகும். அதன்படி தனுசு, துலாம், கடகம், ரிஷபம் மீனம் மகரம் ஆகிய ராசியில் பிறந்தவர்களும் குருபகவானுக்கு பரிகாரம் செய்துக்கொள்வது அவசியமாகும். 

குருப்பெயர்ச்சியன்று வழிபட வேண்டிய குரு ஸ்தலங்கள்..

திருச்செந்தூர்
ஆறுபடை வீடுகளில் இரண்டாவதாகக் கருதப்படும் திருச்செந்தூர் குரு பகவானின் பரிகாரத்துக்கு ஏற்ற தலமாகும். கடலோரத்தில் அமைந்த இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமானையும், குரு பகவானையும் வழிபட்டு பரிகாரம் செய்வது நல்ல பலனை அளிக்கும்.

தென்குடி திட்டை
இந்த குருஸ்தலம் கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் வழியில் உள்ளது இங்குள்ள குரு, ராஜயோக குருவாக தனிச்சந்நதியில் காட்சி அளிக்கிறார்.

பட்டமங்கலம்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இக்கோவிலில், குரு பகவான் கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்த கோலத்தோடு காட்சி தருகிறார்.

திருவாலிதாயம்
சென்னையை அடுத்த பாடி, டிவிஎஸ் லூகஸ் அருகில் உள்ளது. இங்குள்ள குருபகவான் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக கருதப்படுகிறார்.

ஆலங்குடி
திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆலங்குடியில் தெற்கு நோக்கி வீற்றிருந்து தனி சன்னிதியில் குரு பகவான் அருள்பாலிக்கிறார்.

குருவித்துறை
மதுரை மாவட்டம், சோழவந்தானுக்கு அருகில் உள்ளது. இங்குள்ள பெருமாள் கோவிலில் சிறப்பாக காட்சி தருகிறார் குருபகவான்.

தக்கோலம்
அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் உள்ளது ஜலநாதீசுவரர் கோயில். இங்குள்ள தட்சிணாமூர்த்தி கலைநயத்தோடு காணப்படுகிறார்.

மயிலாடுதுறை
இங்கு தட்சிணாமூர்த்தியாக அருள்புரியும் குரு பகவானையும், உத்திர மாயூரம் என்று அழைக்கப்படும் வள்ளலார் கோயிலில் தட்சிணாமூர்த்தியாக ரிஷப தேவருக்கு உபதேசம் செய்யும் மேதா தட்சிணாமூர்த்திப் பெருமானையும் வழிபட குரு தோஷங்கள் நிர்வத்தியாகும்.

அயப்பாக்கம்
சென்னை, அயப்பாக்கத்தில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தி 16 அடி உயர பிரம்மாண்ட மூர்த்தியாகும். குருபகவானின் இயல்புபடியே இவர் கல்விச்செல்வம் வழங்குவதில் தன்னிகரற்றவர் என்பது பக்தர்கள் அனுபவம்.

கும்பகோணம்
கும்பகோணத்தில், கோபேஸ்வரர் ஆலயம் குரு பரிகாரத்திற்கு ஏற்ற ஆலயமாகக் கருதப்படுகிறது. குருபகவான் வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று.

குச்சனூர்
தேனி மாவட்டம் குச்சனூரில் குருபகவான் வடக்கு திசை நோக்கி யானை வாகனத்துடன் ராஜதோரணையில் அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால், பித்ரு தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.

திருவொற்றியூர்
சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்கு முன்பு தட்சிணாமூர்த்திக்கு தனிக்கோயில் உள்ளது. சுமார் 10 அடி உயரத்தில் அற்புதமான வடிவழகுடன் வீற்றிருக்கிறார். ஆலமரம் இவருக்கு குடை பிடிப்பதுபோல் அமைந்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களிலும் குருபகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அனைத்து சிவாலயங்களிலும் நவக்கிரகத்தில் குரு வீற்றிருப்பார். அது மட்டுமில்லாமல் தனி சந்நதியில் தட்சிணாமூர்த்தியாகவும் இடம் பெற்றிருப்பார்.

இந்த குருப் பெயர்ச்சியில் குருபகவானை வழிபட்டு குருவருளும், திருவருளும் பெறுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏழுமலையான் தரிசனம்: 20 மணி நேரம் காத்திருப்பு

மக்களின் அடிப்படைத் தேவைகள் பூா்த்தியாகவில்லை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 : தொடரை வென்றது இந்தியா!

மூன்வாக் - மினி கேசட் விடியோ!

கொடநாடு வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட்

SCROLL FOR NEXT