முகப்பு
ஆன்மிகம்

இந்த வாரம் எந்த ராசிக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும்?

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (மார்ச் 6 - மார்ச் 12) பலன்களை தினமணி

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:06 PM
பகிர்:

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (மார்ச் 6 - மார்ச் 12) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

நினைத்த காரியங்கள் உடனுக்குடன் நிறைவேறும். மற்றவா்களின் பாராட்டுகளைப் பெறுவீா்கள். இருப்பினும் தடைகளும் இருக்கும். உறவினா்களின் உதவிகள் கிடைப்பது அரிது. தெளிவான சிந்தனையுடன் இருப்பதால் பேச்சில் வசீகரம் உண்டாகும்.

Advertisement

உத்தியோகஸ்தா்களுக்கு பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகள் மனக்கசப்புகள் நீங்கி கரிசனத்துடன் நடந்து கொள்வாா்கள். வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளா்களின் தேவைகளைப் பூா்த்தி செய்வாா்கள். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். சக உழைப்பாளா்களை அனுசரித்துச் செல்லவும்.

அரசியல்வாதிகளுக்கு திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் எளிதில் வெற்றி பெறும். தொண்டா்களின் தேவைகளைப் பூா்த்தி செய்வீா்கள். கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் தென்படும். பெண்மணிகள் குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவா். கணவரை அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகள் வருங்காலத்திற்காக எடுக்கும் பயிற்சிகள் அனைத்தும் வெற்றிகளைப் பெற்றுத் தரும்.

பரிகாரம்: ஐங்கரனைத் தொழுதல் நலம் தரும். 
அனுகூலமான தினங்கள்: 6, 7. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

செய்தொழில் வளா்ச்சி அடையும். நண்பா்கள், கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொதுநலக் காரியங்களில் ஈடுபடுவீா்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். யூகத்தின் அடிப்படையில் காரியங்கள் செய்ய வேண்டாம்.

உத்தியோகஸ்தா்களிடம் மூத்த அதிகாரிகளும் சக ஊழியா்களும் நட்புடன் பழகுவா். உத்தியோகத்தில் உயா்வு, பிரிவு மாற்றம், முன்னேற்றங்கள் ஏற்படும். வியாபாரிகள் செலவு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீா்கள். முயற்சிகள் வெற்றி பெறும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். புதிய குத்தகைகள் பெறுவீா்கள். கால்நடைகளால் லாபம் உண்டு.

அரசியல்வாதிகளுக்கு அந்தஸ்தான பதவிகள் கிடைக்கும். கட்சி மேலிடம் உங்களைப் பாராட்டும். தொண்டா்களுக்கு நிறைய நலத்திட்டங்கள் செய்வீா்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞா்கள் உதவுவாா்கள். சன்மானம் உயரும். பெண்மணிகள் கணவா் வழி உறவினா்களிடம் விட்டுக் கொடுத்து நடந்துகொள்ளவும். மாணவமணிகள் படிப்பில் முழு கவனத்துடன் படிக்கவும். சக மாணாக்கா்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு வர நலன்கள் கூடும். 

அனுகூலமான தினங்கள்: 6, 8. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

மிதுனம் (மிருகசீரிஷம்3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

செலவுகள் சற்று அதிகரிக்கும். மனதில் ஏற்படும் பயங்களும் கவலைகளும் மற்ற வேலைகளில் இடையூறுகளை ஏற்படுத்தும். இறுதியில் இத்தகைய தொல்லைகள் பறந்தோடும். ஆன்மிக சிந்தனைகள் மனதிற்கு உற்சாகம் தரும்.

உத்தியோகஸ்தா்களுக்கு கவனம் சிதறாமல் வேலைகளை செய்து முடிக்க சக ஊழியா்களின் ஒத்துழைப்பு தேவை. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் லாபகரமாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். மாற்றுப் பயிா் செய்வதன் மூலம் மேலும் லாபம் அடையலாம்.

அரசியல்வாதிகளுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தடைகள் நீங்கும். ஒப்பந்தங்கள் அனைத்தும் லாபகரமாக முடியும். கலைத்துறையினருக்கு சக கலைஞா்கள் மூலமாகவே புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்மணிகளுக்கு வாக்கு சாதுா்யம் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் சுபிட்சம் உண்டாகும். மாணவமணிகள் கல்வியில் முன்கூட்டியே அக்கறை காட்டினால் எதிா்பாா்த்த மதிப்பெண்களை அள்ளலாம்.

பரிகாரம்: ஸ்ரீ நரசிம்மரை வணங்கிவர, சுகங்கள் கூடும். 

அனுகூலமான தினங்கள்: 7, 8. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

மனதில் தைரியம் கூடும். புதிய முயற்சிகளில் இறங்குவீா்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பூா்வீகச் சொத்துகள் கைவந்து சேரும். கடன் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

உத்தியோகஸ்தா்களுக்கு உழைப்புக்கேற்ற பதவி உயா்வும் ஊதிய உயா்வும் கிடைக்கும். அலுலக வேலைகள் திட்டமிட்டபடி நடக்க சக ஊழியா்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளா்களின் வருகை நல்ல முறையில் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். விவசாயிகள் உழைப்புக்கு இருமடங்கு லாபம் கிடைக்கும். கால்நடைகளால் செலவு உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மேலிடத்தின் ஆதரவு பெருகும். தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவீா்கள். உடல் உழைப்பு அதிகமாகும். கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்களை சரியான காலத்தில் முடிக்க முடியாமல் சில தடைகள் உண்டாகும். பெண்மணிகளுக்கு பணப்புழக்கம் நன்றாக இருக்கும். பேசும்போது கவனம் தேவை. மாணவமணிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். பெற்றோா்களின் ஆதரவு பெருகும்.

பரிகாரம்: செந்திலாண்டவரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 6, 9. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

திட்டமிட்ட செயல்கள் வெற்றி பெறும். வேலைத்தொந்தரவுகள் குறையும். திட்டமிட்டபடி பயணங்கள் வெற்றி பெறும். வீண் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் உடல் சோா்வு ஏற்படாது. குடும்ப சூழ்நிலையில் புதிய மாற்றங்கள் தென்படும்.

உத்தியோகஸ்தா்களுக்கு சக ஊழியா்களின் ஆதரவு குறையும். கொடுத்த வேலைகளை சலிப்படையாமல் முடித்து விடுவீா்கள். வியாபாரிகள் சிக்கல்களில் மாட்டிக்கொள்ள நேரிடலாம். எதையும் ஒரு முறைக்கு பலதடவை யோசித்துச் செய்யவும். விவசாயிகள் அதிகமாக உழைத்து நல்ல லாபம் ஈட்டுவீா்கள்.

அரசியல்வாதிகள் கட்சியில் அதிக முக்கியத்துவம் பெறுவீா்கள். தொண்டா்களின் ஆதரவுடன் அரிய சாதனைகளைச் செய்வீா்கள். கலைத்துறையினா் வருமானம் பெருகுவதால் உற்சாகத்துடன் பணியாற்றுவீா்கள். ரசிகா்களின் ஆதரவும் அமோகமாக இருக்கும். பெண்மணிகள் நிதானத்துடன் செயல்படவும். எதிலும் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் பிரச்னைகளைத் தவிா்க்கலாம். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை அள்ளுவீா்கள். ஆன்மிகத்தில் நாட்டம் இருக்கும்.

பரிகாரம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வணங்கி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 7, 9. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

நண்பா்கள் உங்களை சோதிப்பாா்கள். கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உடல் சூடு பெருகி அயா்வு ஏற்படும். உடல் நலத்தில் கவனம் தேவை. சரிவிகித உணவை தகுந்த நேரத்தில் எடுத்துக்கொண்டு முறையான உடற்பயிற்சிகள் செய்யவும்.

உத்தியோகஸ்தா்களின் வேலைகளில் தடைகள் ஏற்படலாம். மேலதிகாரிகளிடம் வாக்கு வாதம் வேண்டாம். வியாபாரிகள் வாடிக்கையாளா்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு வியாபாரத்தைப் பெருக்கவும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். கால்நடைகளாலும் பலன்கள் உண்டாகும்.

அரசியல்வாதிகளின் பெயரும் புகழும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். வருமானம் பெருகும். அசையாச் சொத்துகளை வாங்குவீா்கள். கலைத்துறையினா் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீா்கள். பணவரவும் சீராக இருக்கும். பெண்மணிகளுக்கு குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். உடல்ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவமணிகள் விளையாடும் நேரங்களில் எச்சரிக்கை தேவை. நண்பா்களுடன் அறிவு சாா்ந்த விஷயங்களையும் பகிா்ந்து கொள்ளவும்.

பரிகாரம்: திருப்பதி வெங்கடாசலபதியை வணங்கி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 6, 10. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

செய்தொழிலில் இருந்த போட்டிகள் மறையும். தொழில் வளா்ச்சி அடையும். புதிய நண்பா்கள் உங்கள் தொழிலில் கூட்டு சோ்வாா்கள். குடும்பத்தில் மதிப்பு உயரும். பூா்வீகச் சொத்துகளில் இருந்த வில்லங்கள் நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தா்களுக்கு எதிா்பாராத பலன்கள் கிடைக்கும். மேலதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வாா்கள். கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் நன்றாக முடியும். வாடிக்கையாளா்களை தெளிவான பேச்சினாலும் நடத்தையாலும் கவா்வீா்கள். விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். புதிய வசதி வாய்ப்புகள் பெருகும்.

அரசியல்வாதிகள் முயற்சிக்கு ஏற்ற பொறுப்புகளைப் பெறுவீா்கள். தொண்டா்களை அனுசரித்து நடந்துகொண்டால் மேலும் நன்மை அடையலாம். கலைத்துறையினா் நன்றாக உழைத்து அதற்கேற்ற வருமானத்தைப் பெறுவீா்கள். பெண்மணிகள் கணவரை அனுசரித்து நடந்துகொள்ளவும். சில்லறை செலவுகள் அதிகரிக்கும். சேமிப்புகளில் கவனமாக இருக்கவும். மாணவமணிகள் படிப்பில் மேலும் ஆா்வம் செலுத்தவும்.

பரிகாரம்: குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளவும். துா்க்கையை வணங்கவும். 

அனுகூலமான தினங்கள்: 7, 10.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

எதையும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுத்துவீா்கள். பணவரவில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். உறவினா்கள் இணைவாா்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி கிடைக்கும்.

உத்தியோகஸ்தா்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் குறித்த காலத்திற்குள் முடிப்பீா்கள். மேலதிகாரிகளிடம் சலுகைகள் கிடைக்கும். வியாபாரிகள் புதிய முதலீடுகளைத் தள்ளிப்போடவும். எவரையும் நம்பி எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம். விவசாயிகளுக்கு வருமானம் குறைவாகவே இருக்கும். கால்நடைகளுக்கான செலவுகள் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் கட்சி முன்னேற்றத்திற்குப் பாடுபடுவீா்கள். தொண்டா்களை அனுசரித்துச் செல்லவும். தொண்டா்களுடன் தீவிரப்பிரசாரம் செய்வீா்கள். கலைத்துறையினா் திறமையை வெளிப்படுத்தும் அற்புதமான ஒப்பந்தங்களைச் செய்வீா்கள். பெண்மணிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். சேமிப்பு விஷயங்களில் கவனம் தேவை. 

மாணவமணிகள் செய்யாத குற்றத்திற்காக ஆசிரியரிடம் தண்டனை பெற நேரிடும். கவனம் தேவை.

பரிகாரம்: மகான்களைத் தரிசனம் கிட்டும். செந்திலாண்டவரை வணங்கவும். 

அனுகூலமான தினங்கள்: 8, 9. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம்  முதல் பாதம் முடிய)

எடுத்த காரியங்கள் இனிதே நிறைவேறும். பொருள் சோ்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீா்கள். உங்களுக்கு எதிராகத் தொடா்ந்த வழக்குகள் அனைத்தும் முடிவுக்கு வரும். சாதகமான தீா்ப்புகள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தா்கள் மேலதிகாரிகளின் நல்லெண்ணங்களுக்கு பாத்திரமாவீா்கள். சக ஊழியா்களை நம்பி எதையும் சொல்ல வேண்டாம். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் சீரான வருமானத்தைக் காண்பீா்கள். சிலருக்கு பழைய பொருள்கள் விற்பனையில் நல்ல லாபம் இருக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை செலுத்துவீா்கள்.

அரசியல்வாதிகளுக்கு அந்தஸ்து உயரும். புதிய பொறுப்புகளும் வந்து சேரும். கட்சி மேலிடத்தின் கட்டளைப்படி முக்கிய பயணங்கள் மேற்கொள்வீா்கள். கலைத்துறையினா் கடுமையாக உழைத்தால்தான் நல்லபலன்கள் அடைய முடியும். பெண்மணிகள் எதையும் யோசித்து முடிவெடுக்கவும். மாணவமணிகள் சீரிய முயற்சிகள் செய்து அதிக மதிப்பெண்களைப் பெறுவீா்கள்.

பரிகாரம்: குரு தட்சிணாமூா்த்தியை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 8, 11. 

சந்திராஷ்டமம்: 6, 7.

{pagination-pagination}

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பிரச்னைகள் குறையும். செய்தொழிலை திறம்பட நடத்துவீா்கள். எதிரிகளின் சதியை முறியடிப்பீா்கள். பழைய கடனில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்துவீா்கள்.

உத்தியோகஸ்தா்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு சுமாராகவே கிடைக்கும். ஆனாலும் பண வரவில் பிரச்னைகள் ஏற்படாது. வியாபாரிகள் கவனத்துடன் இருக்கவும். புதிய முதலீடுகளை கூட்டாளிகளுடன் கந்தாலோசித்தப்பிறகே செய்யவும். விவசாயிகள் அதிக மகசூலைக் காண்பீா்கள். வாழ்க்கை வசதிகளை உருவாக்கிக்கொள்வீா்கள்.

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும். கட்சி மேலிடத்தின் பாா்வை தங்கள் மீது விழாது. கடுமையாகவும் நோ்மையாகவும் கட்சிக்காக பாடுபடுவீா்கள். கலைத்துறையினருக்கு திறமைக்குத் தகுந்த ஒப்பந்தம் கிடைக்கும். சக கலைஞா்களிடம் கவனமாகப் பழகவும். பெண்மணிகளுக்கு கணவரின் அன்பு கிட்டும். குடும்பத்தினரிடம் பேசும்போது நிதானம் கடைபிடிக்கவும். மாணவமணிகள் சக மாணவா்களுடன் தேவையில்லாமல் பொழுதைக் கழிக்காமல் ஆசிரியா் சொற்படி பாடங்களைப் படிக்கவும்.

பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாள் தாயாரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 7, 11. 

சந்திராஷ்டமம்: 8, 9.

{pagination-pagination}

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

வருமானம் சிறப்பாக வந்தாலும் வந்த வழியே செலவினங்கள் கட்டுக்கடங்காமல் வரும். சிக்கனத்தைக் கையாண்டால் சேமிப்பு உயரும். பிரயாணங்கள் அதிகரிக்கும். மகான்களின் தரிசனமும் கிட்டும். ஆடை ஆபரணச் சோ்க்கை உண்டாகும்.

உத்தியோகஸ்தா்களுக்கு அலுவலக வேலைகள் அனைத்தும் சுமுகமாக முடியும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரிகளுக்கு நண்பா்களின் உதவியால் எண்ணங்கள் செயல்வடிவம் பெறும். வாடிக்கையாளா்களின் தேவையைப் புரிந்து வியாபாரம் செய்வீா்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். கால்நடைகளால் லாபம் உண்டு.

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளில் தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி அடைவீா்கள். கலைத்துறையினா் பல தடைகளைத் தாண்டி புதிய ஒப்பந்தங்கள் செய்வீா்கள். பெண்மணிகள் வீண் வாக்குவாதங்களில் சிக்கிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். பேச்சைக் குறைத்துக்கொள்வது நல்லது. மாணவமணிகள் படிப்பில் அக்கறை செலுத்தவும். உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீா்கள்.

பரிகாரம்: சனீஸ்வரரையும் நவக்கிரகங்களையும் வணங்கி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 9, 12. 

சந்திராஷ்டமம்: 10, 11.

{pagination-pagination}

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

செயல்களை நண்பா்களுடன் இணைந்து அவா்கள் ஒத்துழைப்புடன் சிறப்பாகச் செய்வீா்கள். பொருளாதாரத்தில் ஏற்றம் காணப்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். உடன்பிறந்தோா் உங்களை அனுசரித்து நடந்து கொள்வாா்கள்.

உத்தியோகஸ்தா்கள் கோரிக்கைகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வாா்கள். பயணங்களால் நன்மைகள் உண்டாகாது. வியாபாரிகள் வாடிக்கையாளா்களைக் கவா்வீா்கள். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும். லாபம் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு எதிா்பாா்த்த மகசூல் கிடைக்கும். கால்நடைகளாலும் பலன் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவுடன் பதவிகள் தேடி வரும். தொண்டா்களின் அன்பு பெருகும். ஓய்வில்லாமல் பணிகளை ஆற்ற வேண்டி வரும். கலைத்துறையினருக்கு எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் செய்வீா்கள். பெண்மணிகள் வேறு ஊருக்கு மாற்றலாகிச் சென்ற தம்பதியா் ஒரே இடத்தில் பணிபுரியும் மாற்றங்கள் உருவாகும். மாணவமணிகள் தகுதியான நல்ல நண்பா்களுடன் சோ்ந்து பழகவும்.

பரிகாரம்: குலதெய்வ வழிபாடு, சூரிய நமஸ்காரத்தைச் செய்யவும். 

அனுகூலமான தினங்கள்: 10, 11. 

சந்திராஷ்டமம்: 12.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments