செய்திகள்

வடலூர் சத்திய ஞான சபையில் நாளை ஜோதி தரிசனம்

தினமணி

கடலூர் மாவட்டம், வடலூர் சத்தியஞான சபையில் ஐப்பசி மாத ஜோதி தரிசன நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசன விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி ஐப்பசி மாத பூச நட்சத்திரத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை இரவு 7.45 முதல் 8.45 மணிக்குள் 6 திரைகளை நீக்கி, மூன்று முறை ஜோதி தரிசனம் காட்டப்படும்.
மேட்டுக்குப்பத்தில் கொடிகட்டும் விழா: அன்றைய தினம் மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் 144-ஆவது சன்மார்க்கக் கொடி கட்டுதல் விழா நடைபெற உள்ளது. வள்ளலார் முதன்முதலில் மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் ஐப்பசி மாதம் 7-ஆம் தேதி (22.10.1873) மேல்பாகம் மஞ்சள், கீழ்பாகம் வெள்ளை நிறமுடைய சன்மார்க்கக் கொடிகட்டி பேருபதேசம் செய்து அருளினார்.
இந்த நாளில்தான் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எனும் திருமந்திரத்தை உபதேசித்தார். இந்த நிகழ்வின், 144-ஆவது ஆண்டு சன்மார்க்கக் கொடி கட்டும் நிகழ்ச்சி மேட்டுக்குப்பத்தில் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

SCROLL FOR NEXT