பஜனையில் சிறப்பாக பாடிய சிறுமிக்கு கேடயம் வழங்கிய ஆன்மிக சொற்பொழிவாளர் பி.சுவாமிநாதன். 
செய்திகள்

சந்திரசேகரேந்திர சுவாமிகளின் அனுஷ நட்சத்திர சிறப்பு அபிஷேகம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவருக்கு அனுஷ நட்சத்திர சிறப்பு அபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவருக்கு அனுஷ நட்சத்திர சிறப்பு அபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சங்கர மடத்தில் காஞ்சி மகா பெரியவர் என அழைக்கப்படும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிக்கு 34-ஆவது மாதமாக அனுஷ நட்சத்திரத்தையொட்டி, அனுஷம் குடும்பத்தினர் சார்பில் ஸ்ரீ சந்திரசேகேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்புப் பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர், அனுஷம் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள் பஜனை பாடல்களை பாடினர். சிறப்பான பாடல்களை பாடிய சிறுவர், சிறுமிகளுக்கு சங்கர மடம் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி, மடத்தின் உள் பிரகாரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதற்கான ஏற்பாடுகளை அனுஷம் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நளினி சிதம்பரம் உறவினா் கொலை வழக்கு: 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்திவைப்பு

விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள கட்டடங்களின் உயரக் கட்டுப்பாடுகள்: சா்வதேச ஆய்வுக்கு அரசு திட்டம்

காதலி ஏமாற்றியதால் இளைஞா் வெளிநாட்டில் தற்கொலை

50-க்கும் குறைவான ஆயுதங்களால் பாகிஸ்தானை பின்வாங்க செய்த விமானப் படை!

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...? -மு. தமிமுன் அன்சாரி

SCROLL FOR NEXT