குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் குடிகொண்டிருப்பான். அப்படி குமரன் இருக்கும் இடத்தில் அவனது வாகனமும் இருக்கும். குமரனுக்கு மயில் மட்டும் தான் வாகனமா என்று கேட்டால் இல்லை.
• ஒரு சமயம் நாரத முனிவர் ஒரு வேள்வி நடத்தினார். அந்த வேள்வியின் போது முனிவர்கள் சில மந்திரங்களைத் தவறாக உச்சரித்தனர். அதன் விளைவாக வேள்வித் தீயிலிருந்து ஒரு சிவப்பு நிற ஆட்டுக்கிடா ஒன்று வெளிப்பட்டு முரட்டுத்தனமாக எல்லோரையும் தாக்கியதோடு விண்ணுலகிலும், மண்ணுலகிலும் வெறியோடு பாய்ந்து அழிவை ஏற்படுத்தியது. அதைக்கண்டு பயந்த முனிவரும் மற்றவர்களும் ஆறுமுகப் பெருமானிடம் சென்று முறையிட்டு அந்த ஆட்டுக்கிடாவை அழித்து அருளிபுரிய வேண்டும் என்று வேண்டினர்.
• முருகனும் வீரவாகுத்தேவரிடம் அந்த ஆட்டுக்கிடாவை வாகனமாகக் கொண்டு அருளினார். அன்றுமுதல் முருகன் "மேஷவாகனர்" என்றும் போற்றப்பட்டார். முருகன் திருப்பரகுன்றத்தில் ஆடு வாகனத்தில் உள்ளார்.
• ஹரிகேசன் என்ற கொடிய அரக்கனிடம் போரிட்டு வலிமையிழந்த இந்திரன் சுவாமிமலை சென்று முருகனை வேண்டி தவமிருந்து அழுந்த பலத்தைத் திரும்பப் பெற்றான். அதற்கு நன்றிக்கடனாக
இந்திரன் ஐராவதம் என்ற தன் வெள்ளை யானையை முருகனுக்கு வாகனமாக அங்கேயே விட்டுச் சென்றான்.
• சூரனை போரிட்டு வென்றபின் அவனை இரண்டாகப் பிளந்து ஒரு பகுதியை சேவல் கொடியாகவும் மற்றொரு பகுதியை மயில் வாகனமாகவும் கொண்டதை நாம் நன்கு அறிவோம்.
• கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், தக்கலை அருகிலுள்ள குமாரகோயிலில் உற்சவ காலங்களில் முருகன் குதிரை வாகனத்தில் பவனி வருவார்.
கோவையில் உள்ள மருதமலையில் உள்ள மண்டபத்தில் முருகன் குதிரை மீது வந்த சிற்பத்தை காணலாம்.
• இரத்தன கிரியில் முருகனின் வாகனமாக இருக்கும் மயில் அசுரர்களுக்கு பயந்து ஓடின. அது இந்திரனே என்கிறது இரத்தனகிரி தல வரலாறு.
• திருத்தணியில் உள்ள யானை வாகனம் சுவாமியை பார்க்காமல் கிழக்கு நோக்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.