திருவண்ணாமலையில், செப்டம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் ஆறாவது திருமந்திர மாநாடு மற்றும் சிவதீட்சை வழங்கும் விழா நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை, மேலவீதியில் உள்ள ஸ்ரீகமலாட்சி பாண்டுரங்கன் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சிகளில், திருமந்திர மாநாட்டை திருப்பனந்தாள் ஸ்ரீ காசி திருமடத்தின் அதிபர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமித்தம்பிரான் சுவாமிகள் துவக்கி வைத்து ஆசியுரை வழங்குகிறார். திருக்கயிலாய பரம்பரை துழாவூர் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ நிரம்ப அழகிய ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள், சிவாகம முறைப்படி சிவதீட்சை அளித்து ஆசியுரை வழங்குகிறார்.
இவ்விழாவில், கிரிவலம், திருக்கோயில் வழிபாடு, திருமந்திரப் பேருரை, திருமுறை இசை அரங்கம், மாகேஸ்வர பூஜை, அன்னதானம் ஆகியவற்றுடன், சிவதீட்சை பெறும் அன்பர்களுக்கு அரனருள் ஆசிக்கவசம் அணிவித்து சிவநெறிச் செல்வர் என்ற நற்சான்றிதழும் வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சிகளை, சென்னை மதுரவாயல், ஸ்ரீகிருஷ்ணா நகரில் உள்ள அரனருள் அமைப்பின் தலைவர் சபா. சண்முகசுந்தரம் மற்றும் ஸ்தாபகர் சாமி. தண்டபாணி ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர். தொடர்புக்கு: 044-23782333, 9444156335, Email - aranarul@yahoo.co.in
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.