செய்திகள்

கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு நகரில் மிகவும் பழைமைவாய்ந்த கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

DIN

செங்கல்பட்டு நகரில் மிகவும் பழைமைவாய்ந்த கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
செங்கல்பட்டு நகரம் சின்னநத்தம் முருகேசனார் தெருவில் உள்ள இக்கோயிலில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 6 மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. 
இந்நிலையில், திருப்பணிகள் நிறைவுற்ற நிலையில், கெங்கையம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்றன. 
விழாவை முன்னிட்டு, புதன்கிழமை ஹோமங்கள் மற்றும் முதல் காலயாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. 
வியாழக்கிழமை இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றது. 
வெள்ளிக்கிழமை காலை நான்காம் கால யாக பூஜை, யாத்ரா தானம், குடம் புறப்பாடு ஆகியவை நடைபெற்றன. இதையடுத்து, அனைத்து மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கெங்கை அம்மன், ஸ்ரீசெல்வமங்கள் விநாயகர், சிவன், சப்த கன்னிகள், ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு, திருவடிசூலம் மகாசக்தி பீடமான 51 உயர தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் ஸ்தாபகர் பு. மதுரைமுத்து சுவாமிகள் முன்னிலை வகித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

இன்று உங்க ராசிக்கு எப்படி?

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறை

தெய்வ தரிசனம்... வழக்கு விவகாரங்களில் வெற்றி தரும் திருநாவலூர் திருநாவலேஸ்வரர்!

கைதிகளுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்டம்: வேலூா் சிறைகளில் வகுப்புகள் தொடக்கம்

SCROLL FOR NEXT