செய்திகள்

திருநள்ளாறு ஸ்ரீ நளநாராயண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்

DIN

திருநள்ளாறு ஸ்ரீ நளநாராயண பெருமாள் கோயிலில் பிரம்மோத்ஸவம் தொடக்கமாக செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.
ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ நளநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கொடிக்கம்பம் அருகே எழுந்தருளச் செய்யப்பட்டார். பட்டாச்சாரியார்கள் சிறப்பு ஹோமம் நடத்தி கொடிக்கம்பத்தில் கருடக் கொடியேற்றினர். இந்த நிகழ்ச்சியில், தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், உ.வே.கு. அரங்கநாதாச்சாரியார் சுவாமிகள் உள்ளிட்ட பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
முதல் நிகழ்ச்சியாக மாலை சூரிய பிரபையில் வேணுகோபாலராக பெருமாள் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. புதன்கிழமை ஹம்ச வாகனத்தில் நாச்சியார் திருக்கோலத்திலும், வியாழக்கிழமை சேஷ வாகனத்தில் வைகுந்தராகவும், வெள்ளிக்கிழமை கருட சேவையாகவும் பெருமாள் புறப்பாடு செய்யப்படுகிறது.
நிறைவாக சனிக்கிழமை காலை தேரில் பெருமாள் நளதீர்த்தம் கொண்டு செல்லப்பட்டு தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலை திருக்கல்யாண உத்ஸவம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் நிர்வாக அலுவலர் எஸ்.கே. பன்னீர்செல்வம் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்

பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சி அருகே குப்பை கழிவுகளை கொட்டுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

SCROLL FOR NEXT