செய்திகள்

காஞ்சி மகா பெரியவரின் 124-ஆவது ஜயந்தி

காஞ்சி சங்கர மடத்தின் 68-வது பீடாதிபதியாக இருந்த காஞ்சி மகா பெரியவர் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 124-ஆவது ஜயந்தியை முன்னிட்டு அவரது அதிஷ்டானத்தில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி

காஞ்சி சங்கர மடத்தின் 68-வது பீடாதிபதியாக இருந்த காஞ்சி மகா பெரியவர் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 124-ஆவது ஜயந்தியை முன்னிட்டு அவரது அதிஷ்டானத்தில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
சங்கர மடத்தின் பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் சிறப்பு பூஜைகளை செய்தனர்.
விழாவில், திருப்பதி - திருமலை தேவஸ்தான செயல் அலுவலர் அசோக்குமார் சிங்கால் பங்கேற்று ஏழுமலையானின் பிரசாதத்தை வழங்கினார். பின்னர் சிறப்புப் பூஜையில் பங்கேற்று ஜயேந்திரரிடம் ஆசி பெற்றார்.
பரமாச்சார்யாரின் 124-வது ஜயந்தியையொட்டி, அவர் அதிக நாள்கள் தங்கியிருந்த காஞ்சிபுரத்தை அடுத்த தேனாம்பேட்டையில் அமைந்துள்ள சிவ ஸ்தலத்தில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் வியாழக்கிழமை காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த இரு விழாக்களிலும், தமிழகம் மற்றும் வெளி மாநில பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

காஞ்சி மகா பெரியவர் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின்  124-ஆவது ஜயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்த  சங்கர மடத்தின் பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT