செய்திகள்

இன்று 44,896 ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியீடு

திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் 44,896 ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி

திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் 44,896 ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் தேவஸ்தானம் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை பக்தர்கள் முன்பதிவுக்காக வெளியிட்டு வருகிறது. இந்த மாதம் தேவஸ்தானத்தின் புதிய செயல் அதிகாரியாக அனில் குமார் சிங்கால் பொறுப்பேற்றதையொட்டி, ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியிடும் பணி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த மாதத்துக்கு 44,896 ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 16) காலை 11 மணிக்கு தேவஸ்தான வெளியிடப்படவுள்ளன. இவை பக்தர்களால் உடனடியாக முன்பதிவு செய்யப்பட்டு விடுகிறது.
இதனால் கிராமப்புற பக்தர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. மேலும், இணையதள மைய உரிமையாளர்களும் இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இதனைத் தடுக்க தேவஸ்தானம் இந்த மாதம் முதல் குலுக்கல் முறையில் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி, டிக்கெட்டுகள் தேவைப்படுவோர் தங்களது ஆதார் எண், பெயர், டிக்கெட் எண்ணிக்கை, செல்லிடப்பேசி எண் உள்ளிட்டவற்றை அளித்து டிக்கெட்டை முன்பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
வரும் 23-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு கிடைக்க பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு அவை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும். அதன் பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு செல்லிடப்பேசி அல்லது மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்படும். அவர்கள் தங்களது டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டு ஏழுமலையானை ஆர்ஜித சேவையில் தரிசிக்கலாம்.
இம்முறை மூலம் டிக்கெட் பெற்றவர்கள் மீண்டும் 180 நாள்களுக்கு பிறகே ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை பெற முடியும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

SCROLL FOR NEXT