செய்திகள்

அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகர் மற்றும் 27 நட்சத்திர அதிதேவதைகளின் திருக்கோயில்கள்

இயற்கையிலேயே பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் தோன்றி, ஜீவசக்தியுடன் விளங்குபவை விருட்சங்கள்...

தினமணி

இயற்கையிலேயே பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் தோன்றி, ஜீவசக்தியுடன் விளங்குபவை விருட்சங்கள் (மரங்கள்). இயற்கையாகவே மனிதனின் பாவ கதிர்களை கிரகிக்கின்ற சக்தி விருட்சங்களுக்கு உண்டு. மனிதன் பிறக்கும்போது 27 நட்சத்திரத்தில் ஏதாவது ஒரு நட்சத்திரத்தின் ஆதிக்கத்தில் பிறக்கிறான். அதுவே ஜென்ம நட்சத்திரம் எனப்படுகிறது. நமது வாழ்க்கைக்கும் நட்சத்திரத்திற்கும் நிறைய

தொடர்பு உள்ளது. ஒவ்வொரு நட்சத்திற்கும் ஒவ்வொரு விருட்சங்களும், அதிதேவதைகளும் உள்ளது. அவர்களை வணங்கினால் வாழ்க்கையில் எல்லா வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அவரவர் நட்சத்திரத்திற்கு ஏற்ற விருட்சங்களை நட்டு வளர்த்து வணங்கி வந்தால் வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் அடைய முடியும் என்பது தின்னம். அதனால் தான் தெய்வங்கள் தவம் செய்யும்போது தவம் செய்யும் இடத்திற்கு மேற்கூரை அமைக்காமல் விருட்சங்களின் நிழலிலேயே தவம் செய்துள்ளார்கள்.

இறைவன் குருமூர்த்தியான தக்ஷிணாமூர்த்தி, ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள், சன்யாசிகள், சாதுக்கள், மோட்சம், ஞானம் வேண்டுவோர்கள் விருட்சத்தின் நிழலில் தான் தவம் விரும்பி வாசம் செய்கிறார்கள். அதை விளக்கும் வகையில் ஒவ்வொரு திருக்கோயில்களிலும் ஸ்தல விருட்சம் இருக்கிறது.

நட்சத்திர விருட்சங்கள்:
அஸ்வனி - எட்டி, பரணி - நெல்லி, கிருத்திகை - அத்தி, ரோகிணி - நாவல், மிருகசிரிஷம் - கருங்காலி, திருவாதிரை - செம்மரம், புணர்பூசம் - மூங்கில், பூசம் - அரசு, ஆயில்யம் - புன்னை, மகம் - ஆலம், பூரம் - புரசு, உத்திரம் - அலரி, அஸ்தம் - வேலன், சித்திரை - வில்வம், சுவாதி - மருதம், விசாகம் - விளா, அனுஷம் - மகிழம், கேட்டை - குட்டிபலா, மூலம் - மாமரம், பூராடம் - வஞ்சி, உத்திராடம் - பலா, திருவோணம் - வெள்ளை எருக்கு, அவிட்டம் - வன்னி, சதயம் - கடம்பு, பூரட்டாதி - தேமா, உத்திரட்டாதி - வேம்பு, ரேவதி - இலுப்பை..

நட்சத்திர அதிதேவதைகள்:
அஸ்வினி - அஸ்வனி தேவர்கள், பரணி - எமன், கிருத்திகை - அக்னி, ரோகிணி - பிர்மா, மிருகசிரிஷம் - சந்திரன், திருவாதிரை - ருத்ரன், புணர்பூசம் - அதிதி, பூசம் - கரு, ஆயில்யம் - ஆதிசேசன், மகம் - பித்ரு, பூரம் - பகன், உத்திரம் - அதிமா, அஸ்தம் - சூரியன், சித்திரை - விஸ்வகர்மா, சுவாதி - வாயு, விசாகம் - இந்திரன், அனுஷம் - மித்ரன், கேட்டை - தேவேந்திரன், மூலம் - நிருதி, பூராடம் - நதியா, உத்திராடம் - விச்வே தேவர்கள், திருவோணம் - விஷ்ணு, அவிட்டம் - வசுதேவர், சதயம் - வருணம், பூரட்டாதி - அஜன், உத்திரட்டாதி - அகிர்புத்நியன், ரேவதி - பூஷா.

பலன்கள்:
இத்திருக்கோயிலில் அமைந்துள்ள 27 நட்சத்திர அதிதேவதைகள், 27 நட்சத்திர விருட்சங்கள் அவர் அவர் ஜென்ம நட்சத்திர அதிதேவதை மற்றும் விருட்சத்தினை வழிபடுபவர்களுக்கு சகலவிதமான தோஷங்கள், பாவங்கள் அகலும், நிம்மதி உண்டாகும், வாழ்க்கை சிறப்புற மேம்படும். முப்பிறப்பில் செய்த பாபம், இப்பிறப்பில் செய்யும் பாபம். நாகதோஷம், கிரக தோஷம், லக்ன தோஷம், மகாதிசையினால் உண்டாகும் சங்கடங்கள் விலகும். பிதுர்தோஷம் நீங்கும், திருமண தடை அகலும். சத்புத்திர சந்தானம் உண்டாகும், தடைகள் விலகும் நம் வாழ்வில் ஏற்படுகின்ற சகலவித பிரச்னைகள் நீங்கி வாழ்க்கையில் நிம்மதி ஏற்படும்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்ததும், மிகவும் சக்தி வாய்ந்ததுமான 27 நட்சத்திர விருட்சங்களும் 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கும் திருக்கோயில்கள் காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கூர் கூட்டு சாலை அருகில் உள்ள உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தின் தென்கிழக்காக கூழமந்தல் ஏரிக்கரையின் அருகில் ஆகம விதிப்படி நடுநாயகனாக நட்சத்திர விருட்ச வனமும் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு அம்சம் ஆகும். குடும்பத்தில் உள்ள அனைவரும் அவரவர் நட்சத்திர அதிதேவதை மற்றும் விருட்சங்களை வணங்கி அனைத்து வளங்களும் பெறலாம்.

நடை திறந்திருக்கும் நேரம்
காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரை - மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரையில்

தொடர்புக்கு
திரு.வி.சுவாமிநாதய்யர், மணியம் 14/44, விஸ்வநாதய்யர் தெரு, பங்காரு தோட்டம், காஞ்சிபுரம் 631 501, செல்: 9445120996, 9380242668

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துணை முதல்வா் வருகை: நாகையில் சாலை சீரமைப்புப் பணிகள் தீவிரம்

அரசுக் கல்லூரியில் போக்குவரத்து விழிப்புணா்வு கருத்தரங்கம்

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்கம் ஆா்ப்பாட்டம்

கால்நடைகளுக்கு வாய்நோய் தடுப்பூசி முகாம் டிச.29-இல் தொடக்கம்

குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை விரைவாக வெளியேற்ற கோரிக்கை

SCROLL FOR NEXT