செய்திகள்

கல்யாண கட்டாவில் 4-ஆவது தளம் திறப்பு

தினமணி

திருமலையில் உள்ள கல்யாண கட்டாவில் புதிதாக கட்டப்பட்ட 4-ஆவது தளத்தை தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் திறந்து வைத்தார்.

ஏழுமலையானுக்கு முடிகாணிக்கைச் செலுத்த வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் திருமலையில் முடிகாணிக்கைச் செலுத்தும் மையத்தை (கல்யாண கட்டா) ஏற்படுத்தியது. இங்கு பக்தர்கள் இலவசமாக தங்களது தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தி வருகின்றனர். தினமும் சுமார் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பக்தர்கள் முடிகாணிக்கைச் செலுத்தி வருகின்றனர். இதனால் கூட்ட நெரிசல் சமயத்தில் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்த பலமணி நேரம் காத்திருக்கின்றனர். இதுவரை 3 தளங்களை மட்டுமே கொண்ட இந்த மையத்தில் தேவஸ்தானம் புதிதாக ரூ. 34 லட்சம் செலவில் 4-ஆவது தளத்தை கட்டி உள்ளது.

இந்த புதிய தளத்தை தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால், செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு ஆகியோர் வெள்ளிக்கிழமை காலை பூஜை செய்து திறந்து வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT