விருகம்பாக்கம் சிவ-விஷ்ணு ஆலையத்தில் காலபைரவாஷ்டமி வழிபாடு
விருகம்பாக்கம் சிவ-விஷ்ணு ஆலையத்தில் காலபைரவாஷ்டமி வழிபாடு வெகு விமரிசையாக சனிக்கிழமை நடைபெற்றது.
சென்னையிலுள்ள விருகம்பாக்கம் நடேச நகர் பகுதியில் அமைந்துள்ள சிவ-விஷ்ணு ஆலையத்தில் அமைந்துள்ள காலபைரவர் சன்னிதியில் அஷ்டமி வழிபாடு வெகு விமரிசையாக சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த சிவ-விஷ்ணு ஆலையத்தில் அனைத்து சிறப்பு நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
அவ்வகையில் 11.11.2017 அன்று ஸ்ரீ மகா தேவாஷ்டமி மற்றும் காலபைரவாஷ்டமி வழிபாட்டின் தொடர்பாக இக்கோயிலில் எழுந்தருளி அருள்புரியும் வடுகபைரவருக்கும், ஸ்ரீ ராமாநாத ஈஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
Advertisement
வடுக பைரவர் சன்னதியில் காலையில் மகா பைரவ மூலமந்திர ஹோமம் சிறப்பாக நடைபெற்றது. மாலையில் பைரவருக்கு உகந்த வழிபாடான வடைமாலை சார்த்தப்பட்டு, சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது.
பைரவர் வழிபாடு சகல துன்பங்களையும் போக்க வல்லதும், மன நிம்மதியையும் அளிக்கவல்லது. இந்நிகழ்ச்சியை சிவ-விஷ்ணு ஆலயத்தில் ஸ்ரீ பிரசன்ன விநாயகர் பக்த சபை சிறப்பாக நடத்தியது.
இந்த ஆலயத்தில் நடைபெற்ற பைரவ வழிபாட்டினை திரளான பக்தர்கள் கண்டு வழிபட்டு நலமடைந்தனர்.