செய்திகள்

நேரில் சென்று தரிசிக்க முடியாத நெஞ்சங்களுக்கு.. பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா (புகைப்படங்கள்) 

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா ஏப்ரல் 3-ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. 

தினமணி

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா ஏப்ரல் 3-ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. 

ஆண்டுதோறும் பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் விழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் இந்தாண்டுக்கான குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி கோயிலைச் சுற்றியுள்ள கிராமங்களில் பண்ணாரி அம்மன் உற்சவர் ஊர்வலம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள், மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக குண்டம் விழா நேற்று நடைபெற்றது. 

கல்லூரி மாணவர்கள், மாணவிகள், திருநங்கைகள், கைக்குழந்தையுடன் பெண்கள், காவலர்கள், வனத்துறையினர் என லட்சக்கணக்கானோர் தீ மிதித்தனர். ஆண்டுதோறும் பூசாரி இறங்கியவுடன் மலர் சப்பரம் குண்டம் இறங்குவது வழக்கம். இந்த ஆண்டு முதன்முறையாக சப்பரம் குண்டத்தில் இறக்கப்படவில்லை. 

தமிழகம், கர்நாடகத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர்.

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவை நேரில் சென்று தரிசிக்க முடியாத ஏங்கும் நெஞ்சங்களுக்காக இந்த புகைப்படங்கள்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உயா்நீதிமன்றத்தில் விடியோ எடுத்து ‘ரீல்ஸ்’: இருவா் கைது

உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ்: தங்கப் பதக்க வேட்டையில் 10 இந்தியா்கள்

கத்தியுடன் சுற்றித்திரிந்த 3 இளைஞா்கள் கைது

மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதி

திருநெல்வேலி ஊத்தில் 230 மி.மீ. மழை: நவ. 22-இல் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு

SCROLL FOR NEXT