செய்திகள்

அற்பாயுள் உள்ளவர்களின் கிரகநிலை எப்படி இருக்கும்? 

எடுக்குடையவன் பாபருடன் கூடி, எட்டிலோ, பன்னிரண்டிலோ ஆறிலோ இருந்தால் அற்ப ஆயுள் உண்டாகிறது. 

தினமணி

எடுக்குடையவன் பாபருடன் கூடி, எட்டிலோ, பன்னிரண்டிலோ ஆறிலோ இருந்தால் அற்ப ஆயுள் உண்டாகிறது. 

பாபர்கள் 3, 6, 9, 12-ம் இடத்தில் இருந்தாலும் அற்பாயுளேயாகும். 2-க்குடையவன் ஒன்பதாமிடத்திலும் சனி ஏழிலும் பதினொன்றில் குரு, சுக்கிரன் இருந்தாலும் அற்பாயுளாகும். 

லக்னத்தில் சனி செவ்வாய் இவர்களும், எட்டில் சந்திரனும் 6-ல் குருவும் இருந்தால் அற்பாயுளாகும். லக்னாதி எட்டாமிடத்தில் இருந்தால் அற்பாயுள். 6,8,12-ம் இடத்தில் பாபவரும், லக்னாதிபதி பலமற்று இருந்தால் அற்பாயுளாகும். 

சனி, எட்டுக்குடையவன் இவர்கள் குரூர சஷ்டியம்சத்திலிருந்து பாபருடன் கூடியோ பாபரால் பார்க்கப்பட்டோ இருந்தாலும் அற்பாயுள். பாபர் கேந்திரத்திலிருந்து சுபர் பார்வையைப் பெறாமலும், லக்னாதிபதி பலமற்று இருந்தாலும், இரண்டு பாபர்கள் 12, 2-ம் இடத்தில் இருந்து சுபர் பார்வைப் பெறாமல் இருந்தாலும் அற்பாயுளாகும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாழ்நாள் சாதனையாளர் விருது! இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு கௌரவம்!

ஒரு தேர்தல் வெற்றியாவது வெற்றிருக்கிறாரா எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன்

பராசக்தி டப்பிங்கில் சிவகார்த்திகேயன்!

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

செல்ஃபி புள்ள... சாக்.ஷி மாலிக்!

SCROLL FOR NEXT